ஆலோசனை கூட்டத்தில் நடந்த கடுமையான வாக்குவாதம்....... சமாதானம் செய்த முன்னாள் அமைச்சர்

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே அதிமுக எம்.எல்.ஏ அலுவலகத்தில் நடந்த பொன்விழா ஆலோசனை கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் முன்னிலையில் நடந்த வாக்குவாதத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

ஆலோசனை கூட்டத்தில் நடந்த கடுமையான வாக்குவாதம்....... சமாதானம் செய்த முன்னாள் அமைச்சர்

திருப்பூர் மாவட்டம் பல்லடம் சட்டமன்ற அதிமுக எம்.எல்.ஏ வாக உள்ள எம்.எஸ்.எம் ஆனந்தன் தலைமையில் முன்னாள் அதிமுக அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் முன்னிலையில் அதிமுக பொன்விழாவை சிறப்பான முறையில் நடத்துவது குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

ஆலோசனை கூட்டத்தில் பொன்விழா ஆண்டை சிறப்பாக நடத்துவது குறித்து கட்சி நிர்வாகிகளிடம் பல்வேறு கருத்துகள் கேட்க்கப்பட்டநிலையில், முன்னாள் எம்.எல். ஏ கனரப்புதூர் நடராஜன் மீது அங்கிருந்த ஒரு சில நிர்வாகிகள் பல்வேறு புகார்களை கூறியதாக கூறப்படுகிறது.

இதனால் கோபமுற்ற கரைப்புதூர் நடராஜன் அவர்களிடத்தில் கடுமையாக வாக்குவாதம் செய்தார். அதனைதொடர்ந்து அங்கிருந்த முன்னாள் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் மற்றும் தற்போதைய பல்லடம் தொகுதி எம்.எல்.ஏ உள்ளிட்டோர் வாக்குவாதத்தில் ஈடுபட்டவரை சமாதானம் செய்தனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.