பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு தேதி அறிவிப்பு..!

பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு தேதி அறிவிப்பு..!

பொறியியல் படிப்புகளுக்கு பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு வரும் 25ஆம் தேதி தொடங்கும் என உயர்கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 

ஆன்லைன் விண்ணப்ப பதிவு நிறைவு:

தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள பி.இ.,  பி.டெக் படிப்பிற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு நிறைவடைந்து இருக்கக்கூடிய நிலையில், இந்த ஆண்டு பொறியியல் படிப்புகளுக்காக சுமார் 2 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.  

மாணவர்களுக்கான கலந்தாய்வு தேதி அறிவிப்பு:

பொறியியல் படிப்புகளுக்காக ஆன்லைனில் விண்ணப்பித்துள்ள மாணவர்களின்  கலந்தாய்வு தேதியை உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது. அதன்படி, பொறியியல் படிப்புக்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கான தரவரிசை பட்டியல் வரும் 16ஆம் தேதி வெளியிடப்படும் என்றும், சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு வரும் 20ஆம் தேதி முதல் 23ஆம் தேதி வரை நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் பொது பிரிவினருக்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 25ஆம் தேதி தொடங்கி அக்டோபர் 21ஆம் தேதி வரை பல்வேறு கட்டங்களாக நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

அதனை தொடர்ந்து துணை கலந்தாய்வு அக்டோபர் 22, 23 ஆகிய இரு தேதிகளில் நடைபெறும் என்றும் அக்டோபர் 24 ஆம் தேதியுடன் அனைத்து வகை கலந்தாய்வும் நிறைவு பெறும் என்றும் உயர் கல்வித் துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.