”சனாதனத்தை மீண்டும் திணிக்கும் முயற்சியில் பாஜக” - வன்னியரசு கருத்து!

”சனாதனத்தை மீண்டும் திணிக்கும் முயற்சியில் பாஜக” - வன்னியரசு கருத்து!

நாடாளுமன்ற புதிய கட்டிடம் திறப்பு விழா சனாதனத்தை மீண்டும் திணிக்கும் முயற்சி என விசிக துணை பொதுச்செயலாளர் வன்னியரசு கருத்து தெரிவித்துள்ளார்.

தமிழர் தந்தை சி.பா. ஆதித்தனாரின் 42வது நினைவு தினத்தை முன்னிட்டு சென்னை எழும்பூரில் உள்ள சி.பா. ஆதித்தனார் சிலைக்கு விசிக துணை பொதுச்செயலாளர் வன்னியரசு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த வன்னியரசு, நாடாளுமன்ற புதிய கட்டிடத்தின் திறப்பு விழா சாவர்க்கரின் பிறந்த நாள் அன்று திறக்கப்படுவது ஏன்? என்று கேள்வி எழுப்பியுள்ளார். தொடர்ந்து பேசிய அவர், சாவர்க்கரின் வாரிசு தான் கோட்சே, கோட்சேவின் வாரிசு தான் பாஜக என்றவர், தற்போது நாடாளுமன்ற புதிய கட்டிடத்தின் திறப்பு விழா சனாதனத்தை மீண்டும் திணிக்கும் முயற்சியாக இருப்பதாக கருத்து தெரிவித்தார்.

இதையும் படிக்க : கொரோனாவால் நிறுத்தப்பட்ட பேருந்து சேவை...2 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தொடக்கம்!

முன்னதாக, புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழா சாவர்க்கரின் பிறந்த நாளன்று அதாவது மே 28ல் நடைபெறும் என்று மத்திய அரசு தரப்பில் அறிவிக்கப்பட்டது. ஆனால், இவ்விழாவிற்கு குடியரசு தலைவருக்கு அழைப்பு விடுக்கவில்லை. இதற்கு கண்டனம் தெரிவித்து 19 எதிர்க்கட்சிகள் புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளனர். இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடியே நாடாளுமன்ற கட்டிடத்தை திறந்து வைப்பார் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.