தமிழகத்தில் அதிகரித்து காணப்பட்ட கொரோனா பரவலில் சற்று சரிவு...!

தமிழகத்தில் திடீரென அதிகரித்து வந்த கொரோனா தொற்று பாதிப்பு தற்போது சற்று குறைந்துள்ளது.

தமிழகத்தில் அதிகரித்து காணப்பட்ட கொரோனா பரவலில் சற்று சரிவு...!

தமிழகத்தில் நேற்றைய கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி, தமிழகத்தில் நேற்று புதிதாக ஒரு லட்சத்து 57 ஆயிரத்து 732 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 30 ஆயிரத்து 580 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதில் அதிகபட்சமாக சென்னையில் 6 ஆயிரத்து383 பேரும், கோவையில் 3 ஆயிரத்து 912 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து, தமிழகத்தில் இதுவரை 31 லட்சத்து 33 ஆயிரத்து 990 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

கொரோனாவுக்கு தமிழகத்தில் நேற்று ஒரு நாளில் மட்டும் 40 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதுவரை மொத்தம் 37 ஆயிரத்து 218 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்து உள்ளனர். தமிழகத்தில் நேற்றைய நிலவரப்படி ஒரு லட்சத்து 94 ஆயிரத்து 697 பேர் மருத்துவமனைகளில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா பாதிப்பில் இருந்து நேற்று 24 ஆயிரத்து 283 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதுவரையில் 28 லட்சத்து 95 ஆயிரத்து 818 பேர் குணம் அடைந்துள்ளனர்.