ஏரியில் உடைப்பு ஏற்பட்டு ஆயிரக்கணக்கான ஏக்கரில் நடவு செய்யப்பட்ட சம்பா பயிர்கள் சேதம்...

தஞ்சை மாவட்டத்தில் உள்ள தலையாமங்கலம் பெரிய ஏரி நிரம்பி,  கலங்கள் வழியாக உபரி நீர் வெளியேறி வருவதால், வாரியில் உடைப்பு ஏற்பட்டு, ஆயிரக்கணக்கான ஏக்கரில் நடவு செய்யப்பட்ட சம்பா பயிர்கள் சேதமடைந்துள்ளன.
ஏரியில் உடைப்பு ஏற்பட்டு  ஆயிரக்கணக்கான ஏக்கரில் நடவு செய்யப்பட்ட சம்பா பயிர்கள்  சேதம்...
Published on
Updated on
1 min read

தஞ்சை மாவட்டத்தில் கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது. இதனால் பல ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்ட பயிர்கள் சேதமடைந்து, விவசாயிகள் கடும் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர். பருவமழைக்கு முன் தாந்தோணி, குலமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டிருந்த சம்பா நெல் பயிர்களும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இதுதவிரத தலையாமங்கலம் பெரிய ஏரியிலிருந்து கலங்கள் வழியாக உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருவதால் வாரியில் உடைப்பு ஏற்பட்டு விளைநிலங்களை வெள்ளம் சூழ்ந்துள்ளன.

இதனால் பயிர்கள் அழுகி வருகிறது. இந்தநிலையில் ஏக்கருக்கு 20,000 ரூபாய் வரை செலவு செய்து, நடவு செய்து 10 நாட்களேயான பயிர்கள் வெள்ளத்தில் சேதமடைந்துள்ளதாகவும், அரசு முறையே கணக்கெடுத்து உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com