தமிழகத்தில் அடுத்த சில நாட்களுக்கு பருவமழையின் தீவிரம் தொடரும்...பாலச்சந்திரன்...!

வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் தீவிரமாக இருப்பதாகவும், அடுத்த சில நாட்களுக்கு தீவிரம் தொடரும் என  தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் அடுத்த சில நாட்களுக்கு பருவமழையின் தீவிரம் தொடரும்...பாலச்சந்திரன்...!
Published on
Updated on
1 min read

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வானிலை ஆய்வு மையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன், கூறுகையில்,

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமாக உள்ளதாகவும், அடுத்த சில தினங்களுக்கு தீவிரம் தொடரும் என தெரிவித்த அவர், அடுத்த இரண்டு நாட்களுக்கு கடலோர மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கையும், அதனை ஒட்டிய உள் மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கையும் கொடுக்கப்பட்டுள்ளது என்றார்.

இந்த சிவப்பு எச்சரிக்கை அதி கனமழைக்கான எச்சரிக்கையாக இல்லாமல், தொடரும் மழை பாதிப்பு மற்றும் நீர் நிலைகளின் எச்சரிக்கை நடவடிக்கைகாக மட்டுமே ரெட் அலர்ட் வழங்கப்பட்டிருக்கிறதாக கூறினார்.

மேலும் கடந்த 24 மணி நேரத்தில் 3 இடங்களில் அதிகனமழையும், நான்கு இடங்களில் கன முதல் மிக கன மழையும் பதிவாகி உள்ளதாக கூறிய அவர், அடுத்த 24 மணி நேரத்திற்கு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, ராமநாதபுரம், திருவண்ணாமலை, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழையும், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், மதுரை, தென்காசி, தேனி, திண்டுக்கல், டெல்டா மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும் பெய்ய கூடும் என்றார்.

வடகிழக்கு பருவமழை தமிழ்நாட்டில் தற்போது வரை 70 சதவீதம் கூடுதலாகவும், சென்னையில் 67 சதவீதம் கூடுதலாக பதிவாகி உள்ளதாகவும் கூறிய அவர், வரும் 29-ஆம் தேதி தெற்கு அந்தமான் கடற்பகுதியில் உருவாகும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து வலுப்பெற கூடும் என்றும் இதன் நகர்வுகள் தொடர்ந்து கண்காணிக்க படும் என அவர் தெரிவித்தார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com