வீட்டு உபயோக சிலிண்டரின் புதிய விலை ரூ.1015.50-ஆக நிர்ணயம்.. பொதுமக்கள் கடும் அதிருப்தி!

தமிழகத்தில் வீட்டு உபயோகத்துக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 50 ரூபாய் அதிகரித்துள்ளது. சிலிண்டர் விலை 1000 ரூபாயை தாண்டியதால் பொதுமக்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.

வீட்டு உபயோக சிலிண்டரின் புதிய விலை ரூ.1015.50-ஆக நிர்ணயம்.. பொதுமக்கள் கடும் அதிருப்தி!

ரஷ்யா - உக்ரைன் நாடுகளுக்கு இடையில் நிலவும் போர் காரணமாக, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளது.

இந்நிலையில் தற்போது தமிழகத்தில் வீட்டு உபயோகத்துக்கான சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 50 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ஆயிரம் ரூபாயை கடந்துள்ளது.

அதன்படி 14. 2 கிலோ எடை கொண்ட வீட்டு உபயோக சிலிண்டரின் விலை ஆயிரத்து 15 ரூபாய் 50 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பெட்ரோல், டீசல் விலை உயர்வால் காய்கறி, மளிகை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரித்து மக்கள் இன்னலை சந்தித்து வரும் இந்த வேளையில், சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையும் உயர்ந்துள்ளது மக்களின் சுமையை மேலும் அதிகரித்துள்ளது.