நீட் விலக்கு, "பிரதமர் வீட்டிற்கு முன் அடுத்த போராட்டம்" அமைச்சர் உதயநிதி அறிவிப்பு!

நீட் விலக்கு, "பிரதமர் வீட்டிற்கு முன் அடுத்த போராட்டம்" அமைச்சர் உதயநிதி அறிவிப்பு!
Published on
Updated on
2 min read

தமிழ்நாட்டில் நீட் நுழைவுத் தேர்வால் மாணவர்கள் 21 பேர் தற்கொலை செய்து கொண்டதற்கு மத்திய அரசே காரணம் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.

நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி தமிழ்நாடு முழுவதும் திமுகவின் மாணவரணி, இளைஞரணி, மருத்துவரணி  சார்பில் இன்று ஒருநாள் அடையாள உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. சென்னை வள்ளுவர் கோட்டத்தில்  அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் காலை 9 மணிக்கு தொடங்கிய போராட்டம்  மாலை 5 மணிக்கு  நிறைவடைந்தது. இந்த போராட்டத்தில் அமைச்சர்கள் துரைமுருகன் மா.சுப்பிரமணியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.  

இந்த போராட்டத்தில் இறுதியாக பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், நீட் தேர்வால் தமிழ்நாட்டில் 21 பேர் உயிரிழந்ததற்கு மத்திய அரசுதான் காரணம் என்றார். நீட் தேர்வினால் நடப்பது தற்கொலை அல்ல, கொலை என்றும் கூறினார். நீட் தேர்வு மாணவர்களுடனான கலந்துரையாடலின் போது நீட் தேர்வை ரத்து செய்ய மாட்டேன் என்று ஆளுநர் கூறியதை நினைவு கூர்ந்த உதயநிதி, கையெழுத்து போட நீங்கள் யார்? என கேள்வி எழுப்பினார். மேலும், திமிர்த்தனமாக "I Will Never ever" என எனக்கூற Who Are You ? என ஆவேசத்துடன் பேசினார் உதயநிதி.

மேலும் அவர் ஆர்.என்.ரவி ஆளுநர் அல்ல ஆர்.எஸ்.எஸ். ரவி எனக்கூறிய உதயநிதி ஸ்டாலின் "ஆர்எஸ்எஸ் ரவிக்கு ஒரு சவால், ஆளுநர் பொருப்பை இராஜினாமா செய்யுங்கள், தமிழ்நாட்டில் ஏதோ ஒரு தொகுதியை நீங்களே முடிவு செய்யுங்கள், கழகத்தின் கடைக்கோடி தொண்டனை உங்களுக்கு எதிராக நிற்க வைக்கிறோம். உங்களால் ஜெயிக்க முடியுமென்றால் தமிழ்நாட்டு மக்களை சந்தியுங்கள். உங்களது சித்தாங்களை தமிழ்நாட்டு மக்களிடம் சொல்லுங்கள். செருப்பை கழட்டி அடிப்பார்கள். நீங்கள் ஜெயித்துவிட்டு வந்தால். நீட்டிற்கு ஆதராவாக நானே பிரச்சாரம் செய்கிறேன்" எனக் கூறினார்.


 
ஆளுநர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு ஏதாவது ஒரு தொகுதியில் போட்டியிட தயாரா? என ஆளுநருக்கு சவால் விடுத்தார். அதிமுக எழுச்சி மாநாட்டில் நீட் தேர்வுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற தயாரா எனவும் கேள்வி எழுப்பிய அவர்,  நீட்டுக்கு எதிராக அனைவரையும் ஒன்றிணைந்து அடுத்து  டெல்லியில் பிரதமர் மோடி இல்லத்தின் முன்பு போராட்டம் நடைபெறும் என தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோருக்கு திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி பழச்சாறு கொடுத்து உண்ணாவிரத போராட்டத்தை முடித்து வைத்தார். 

<iframe width="560" height="315" src="https://www.youtube.com/embed/tb8YNuRrGGc" title="YouTube video player" frameborder="0" allow="accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture; web-share" allowfullscreen></iframe>

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com