விஷச்சாராய விவகாரத்தில் அடுத்த கட்டம்..! சிபிசிஐடி-யிடம் ஆவணங்கள் ஒப்படைப்பு!

விஷச்சாராய விவகாரத்தில் அடுத்த கட்டம்..!   சிபிசிஐடி-யிடம் ஆவணங்கள் ஒப்படைப்பு!

மரக்காணம் கள்ளச்சாராய உயிரிழப்பு சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை ஆவணங்கள் சிபிசிஐடி போலீசாரிடம் ஒப்படைப்பு.

மரக்காணம் அருகே எக்கியார்குப்பத்தில் கடந்த 13ம் தேதி கள்ளச்சாராயம் குடித்து 14 பேர் உயிரிழந்தனர். அதனைத்தொடர்ந்து, பலரும் அதே போன்று  இறந்தும், தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டும் இருந்தனர். 

இதனால் மக்களிடையே பெரும் பரபரப்பு இருந்து வந்தது. இது  குறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரித்து வந்தநிலையில், உயிரிழந்தவர்கள் குடித்த சாரயத்தில் மெத்தனால் என்னும் ரசாயனம் கலக்கப்பட்டதால், அது விஷச்சாராயம் என்று அறியப்பட்டது. 

இந்த வழக்கு தீவிரமடையவே, பல இடங்களில் காவல் துறையினர் சாராயம் வியாபாரம் செய்யும் இடங்களிலும் போலி மதுபானக் கடைகளிலும் தீவிர சோதனைகள் மேற்கொண்டனர்.  எண்ணற்ற கணக்கில் சாராயம் காய்ச்சும் கிடங்குகள் மற்றும், ஊரல்களும் கண்டுபிடிக்கப்பட்டு வழக்குகள் போடப்பட்டு வருகிறது. 
சாராயம் காய்ச்சுபவர்கள் கைது செய்யப்பட்டு கிடங்குகள் அழிக்கப்பட்டும் வருகின்றன.

இதையும் படிக்க     | போதை ஆசாமிகளே, பாத்து பேசுங்க..! இனிமே ஓடவும் முடியாது....! ஒளியவும் முடியாது....!

இந்தநிலையில், இவ்வழக்கு தற்போது  சிபிசிஐடி போலீசாருக்கு மாற்றம் செய்யப்பட்டு,  விசாரணை அதிகாரியாக விழுப்புரம் சிபிசிஐடி ஏ.டி.எஸ்.பி கோமதி நியமிக்கப்பட்டார்.

இதனையடுத்து, மரக்காணம் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டிருந்த வழக்கு ஆவணங்களை சிபிசிஐடி ஏ.டி.எஸ்.பி -யிடம் கோட்டக்குப்பம் காவல்துறை டி.எஸ்.பி சுனில் ஒப்படைத்தார்.

இதையும் படிக்க     | பெட்ரோல் பங்குகளில் 2000 ரூபாய் நோட்டுகள் வாங்கப்படும்!