பழையன கழிதலும் புதியன புகுதலும்... போகியைக் கொண்டாடும் தமிழர்கள்...

இன்று அதிகாலை தொடங்கி, தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் போகி பண்டிகை விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.

பழையன கழிதலும் புதியன புகுதலும்... போகியைக் கொண்டாடும் தமிழர்கள்...

தமிழர் திருநாளான பொங்கல் அதாவது திருநாளன்று, விவசாயிகள் மட்டுமின்றி பாரம்பரிய தொழிலாளர்களுக்கு உகந்த நாள் என்றே சொல்லலாம். பொஙல் வைத்து கொண்டாடும் தமிழர்கள், புதிய பொருட்களை வாங்கும் ஒரு நாளாக பொங்கல் இருக்க, பழைய பொருட்களை எரிக்கும் ஒரு நாள் தான் போகி பண்டிகையாக இருக்கிறது.

தங்களது வீடுகளின் வாசலில், தேவையற்ற பழைய பொருட்களை எரித்து போகி பண்டிகையை கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில், இன்று காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை போன்ற பல மாபட்டங்களில் போகி பண்டிகை கொண்டாடப்பட்டது.

செங்கல்பட்டு | ஒட்டியம்பாக்கம் பகுதிகளில், அதிகாலை நான்கு மணி முதல், வீட்டு வாசல்களில் பொது மக்கள் தங்கள் வீட்டில் உள்ள பழைய பொருட்களை எரித்து போகியை கொண்டாடி வந்தனர். அதே போல, கல்பாக்கம் பகுதியில், பழைய பொருட்களை எரித்த போது, ச்றுவர்கள் மேள வாத்தியங்களுடன் கொழுந்து விட்டு எரியும் நெருப்பை சுற்றி உற்சாகத்துடன் மேளம் வாசித்து ஆடி வந்தனர்.

மேலும் படிக்க | பக்தர்கள் எடுத்துவந்த சர்ப்பக் காவடியை பறிமுதல் செய்த வனத்துறையினர்...

காஞ்சிபுரம் | பொதுமக்கள் அதிகாலை 3 மணி தொடங்கி, தங்கள் வீட்டு வாசலில் பழைய பொருட்களை எரித்து போகி பண்டிகையை கொண்டாடி வருகின்றனர். சிறுவர்களும், மேள தாளத்துடன் எரியும் பழம்பொருட்களை சுற்றி ஆட்டம் போட்டு கொண்டாடுகின்றனர்.

மேலும் படிக்க | திரு இருதய சி பி எஸ் இ பள்ளியில் கொண்டாடப்பட்ட சமத்துவ பொங்கல் விழா...

திருவள்ளூர் | புகையில்லா போகியை எப்படி கொண்டாடுவது என புதிய வகையில் போகி பண்டிகையை பூந்தமல்லை மக்கள் கொண்டாடும் முயற்சியில் இறங்கியுள்ளனர். அதிக புகைகளை உருவாக்கக்கூடிய டயர் உள்ளிட்ட பொருட்கள் எரிக்கப்படுகிறதா என்பதை ஆய்வு செய்ய நகராட்சி ஊழியர்கள் பல்வேறு குழுக்களாக பிரிந்து ரோந்து பனியில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.

--- பூஜா ராமகிருஷ்ணன்

மேலும் படிக்க | சந்திரபாபு நாயுடு வீட்டின் முன் போகி கொண்டாடிய நடிகர் பாலகிருஷ்ணா...