
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அடுத்த தாழாக்குடி பகுதியில் வயதான் மூதாட்டி ஒருவர் ஆடு மேய்த்துக்கொண்டிருந்தார். அவர் வயது மூப்பு காரணமாக திடீரென கால் தடுமாறி சாலையிலேயே விழுந்துவிட்டார்.
அப்போது அதே பாதையில் அரசு பேருந்து ஒன்று வேகமாக வந்துக்கொண்டிருந்தது. ஆனால் அந்த அரசு பேருந்தின் ஓட்டுனர் மூதாட்டி விழுவதை கவனித்ததால் சரியான நேரத்தில் சாதுரியமாக செயல்பட்டு பேருந்தை உடனடியாக நிறுத்தினார்.
இதனால் அந்த வயதான மூதாட்டி நூலிழையில் உயிர்தப்பியுள்ளார். இது குறித்த வீடியோ காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருவதோடு, சரியான நேரத்தில் சாதுர்யமாக செயல்பட்டு பேருந்தை நிறுத்திய ஓட்டுனரையும் பொதுமக்கள் பாராட்டு வருகின்றனர்..