ஒமைக்ரான் வைரஸ் இதுவரை தமிழகத்தில் உறுதி செய்யப்படவில்லை.....அமைச்சர் மா.சுப்பிரணியன்...!

ஒமைக்ரான் வைரஸ் இதுவரை தமிழகத்தில் உறுதி செய்யப்படவில்லை என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
ஒமைக்ரான் வைரஸ் இதுவரை தமிழகத்தில் உறுதி செய்யப்படவில்லை.....அமைச்சர் மா.சுப்பிரணியன்...!
Published on
Updated on
1 min read

சென்னை சைதாப்பேட்டை தொகுதியில் நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்று தேர்வானவர்களுக்கு பணி நியமன ஆணையை அமைச்சர்கள் சி.வி.கணேசன், மா.சுப்பிரமணியன் வழங்கினர். அதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறுகையில்,

தமிழகத்தில் வெளிவரும் கொரோனா பரிசோதனை முடிவுகளில் டெல்டா வைரஸ்தான் தற்போது வரை உறுதியாகியுள்ளது. ஒமைக்ரான் வைரஸ் இதுவரை தமிழகத்தில் உறுதி செய்யப்படவில்லை. ஒமைக்ரான் வைரஸ் குறித்து விமான நிலையங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்படுள்ளது. தமிழக அரசு தரப்பில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து ஒன்றிய அரசுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது என்றார். 

"அம்மா மினி கிளினிக்" திட்டம் பெயர் வைப்பதற்காக தொடங்கப்பட்ட திட்டம். இத்திட்டத்தின் மூலம் தமிழக மக்களுக்கு எந்த விதத்திலும் பயனில்லை. அம்மா மினி கிளினிக் திட்டத்திற்காக நியமிக்கப்பட்ட 1820 பேருக்கு மாற்று ஏற்பாடு செய்து வேறு பணி வழங்குவது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார். மேலும், தமிழகத்தில் 12 அரசு ஆய்வகங்களில் உருமாற்றமடைந்த வைரஸ்களை கண்டவறிவதற்கு வசதி உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com