கோலாகலமாக தொடங்கிய செஸ் ஒலிம்பியாட் துவக்க விழா..

44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் துவக்க விழா நிகழ்ச்சிகள் கோலாகலமாக துவங்கியது.

கோலாகலமாக தொடங்கிய செஸ் ஒலிம்பியாட் துவக்க விழா..

2022ம் ஆண்டில் நடக்கும் 44வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி, தமிழ்நாட்டில் மாமல்லபுரத்தில் உள்ள தனியார் விடுதியில் நடந்து வருகிறது. 186 நாடுகள் பங்கேற்கும் இந்த போட்டிக்கான துவக்க விழா, இன்று, மாலை துவங்கியது.

இதன் துவக்க விழாவிற்காக சென்னைக்கு வருகை தந்த பிரதமர் மோடிக்காக வரவேற்புகள் பலமாகத் தயாராகியுள்ள நிலையில், ஐந்தடுக்குப் பாதுகாப்புப் போடப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, சென்னை முழுவதும் 22,000 காவலர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.

தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையின் ஜவகர்லால் நேரு அரங்கில் மாலை 6 மணியளவில்  துவங்கியது. பிரம்மாண்டமாகத் துவங்கிய இந்த விழாவில், கலைநிகழ்ச்சிகள் நடந்தன. பிரபல மணல் ஓவியக் கலைஞர் சர்வம் பட்டேல், “சாண்ட் ஆர்ட்” செய்த நிலையில், தொடர்ந்து, எட்டு இந்திய பாரம்பரிய நடனங்கள் அரங்கேறின.

பின், உலகப் புகழ்பெற்ற பியானோ ப்ளேயரான லிடியன் நாதஸ்வரம், தனது சிறப்பு நிகழ்ச்சியை நடத்தினார். இந்த நிகழ்ச்சிகளை அனைவரும் ரசித்தனர்.

Image

இந்த சர்வதெச செஸ் போட்டிக்காக, கோலிவுட் பிரபலங்கள் பலருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. தமிழ்நாட்டு முதலமைச்சர் முக ஸ்டாலின் தலைமையில் நடக்கும் இந்த போட்டியில், உதயநிதி ஸ்டாலின், கிருத்திகா என அவரது குடும்பம் முழுவதும் கலந்துக் கொண்டனர். அவர்களோடு, தென்னாட்டு சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த், அவரது மகள் ஐஸ்வரியா ரஜினிகாந்த், கார்த்தி, விக்னேஷ் சிவன் ஆகியோர் கலந்துக் கொண்டனர்.

இந்த போட்டிக்கு, பட்டு வேட்டி பட்டு சட்டை அணிந்து வருகைத் தந்த முதலமைச்சர் முக ஸ்டாலின் அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். மேலும், தலைநகர் டெல்லியில் இருந்து வருகைத் தர்ம் பிரதமர் மோடி, சதுரங்க போர்டைப் போல, வெள்ளக் கருப்பு கட்டங்கள் கொண்டு வடிவமைக்கப்பட்ட வேஷ்டி சட்டை அணிந்து வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Image

பிரபல தொகுப்பாளர் பாவனா தான் இந்த நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குகிறார். இன்று மாலை 6 மணியளவில் துவங்கிய இந்த நிகழ்ச்சி, இந்திய பாரம்பரிய கலைகளை முன்னிலைப் படுத்தும் வகையில் தொகுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. ஒரு புறம் இந்த நிகழ்ச்சிகள் நடக்க, மறு புறம், போட்டியாளர்கள் தங்களது உறுதிமொழிகளை எடுத்துக் கொண்டிருக்கின்றனர்.

ஜூலை 28ம் தேதியான இன்று தொடங்கும் இந்த நிகழ்ச்சியில், பிரபல சதுரங்க வீரர்கள் விஸ்வநாதன் ஆனந்த், பிரஞாநந்தா உட்பட பலரும் கலந்துக் கொண்டனர். மத்திய அமைச்சர் அனுராக் சிங் டாகூர், மத்திய இணை அமைச்சர் எல். முருகன் இணைந்தனர்.

இந்த நிகழ்ச்சியின் வரவேற்புரை ஆற்றினார் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் மெய்யநாதன். மேலும், கமலஹாசன் குரலில் தமிழ் கலாச்சாரத்தை வெளிப்படுத்தும் நடன நிகழ்ச்சி நடந்தது.