பூரண மதுவிலக்கு - சட்டவிரோத டாஸ்மாக் மூட வலியுறுத்தி மே -10 பேரணி அறிவித்த கட்சி ?

பூரண மதுவிலக்கு - சட்டவிரோத டாஸ்மாக் மூட வலியுறுத்தி மே -10 பேரணி அறிவித்த கட்சி ?

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள புதிய தமிழகம் கட்சியின் தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி செய்தியாளர்கள் சந்தித்தார் 

அப்போது பேசிய கிருஷ்ணசாமி ;

டாஸ்மாக்கை பன்மடங்கு பெருக்கும்

தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்துவோம் என்று 2021 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக அன்றைய எதிர்க்கட்சித் தலைவர் மு க ஸ்டாலின் பலமுறை கூறினார் ஆனால் திமுக ஆட்சி பொறுப்பேற்று இரண்டு ஆண்டுகள் ஆகியும் தமிழகத்தில் மதுவிலக்கை அமல்படுத்த எந்தவித முயற்சியும் எடுக்கவில்லை  என்று குற்றம் சாட்டினார், அதற்க்கு மாறாக டாஸ்மாக்கை பன்மடங்கு பெருக்கும் நோக்கத்திலேயே இந்த அரசின் செயல்பாடுகள் அமைந்துள்ளது என்றார் மேலும் கரூர் காரர்கள் தான் அனைத்து பார்களிலும், வசூலில் ஈடுபடுவதாககவும் அரசு கஜானாவிற்கு எந்த பணமும் செல்ல வில்லை என்று தெரிவித்தார்.

Tasmac Shops : டாஸ்மாக் கடைகளுக்கு நாளை லீவு: எங்கு தெரியுமா?-tasmac liquor  shops will remain closed on sunday - HT Tamil

மேலும் படிக்க | நீதிமன்றங்கள் அதிகரிப்பதற்கான காரணம் மக்களின் விழிப்புணர்வே...! சட்டத்துறை அமைச்சர்

சட்டவிரோத பார்களை  உடனடியாக அரசு தடுத்து நிறுத்த வேண்டும்

தமிழகத்தில்  4000 - க்கும் மேற்பட்ட பார்கள் சட்டவிரோதமாக எந்த வித அனுமதியும் இல்லாமால் இயங்கி வருகிறது என்றும் தமிழகத்தில் 24 மணி நேரமும் சட்ட விரோதமாக மது விற்பனை செய்யப்படுகிறது  எனவே சட்டவிரோத பார்களை  உடனடியாக அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார் 

தொடந்து பேசிய அவர் தமிழகத்தில் செயல்பட்டு வரும் சட்டவிரோத டாஸ்மாக் பார்களை மூட வலியுறுத்தியும், பூரண மதுவிலக்கை அமல்படுத்த கோரியும்  புதிய தமிழகம் கட்சியின் சார்பில் வருகிற மே 10 ஆம் தேதி சென்னையில் பேரணி நடைபெறும் என்றும்  பேரணியின் இறுதியில் இது தொடர்பாக ஆளுநரை சந்தித்து மனு அளிக்க உள்ளோம் என அவர் தெரிவித்தார் அதோடு தமிழகத்தில் கனிம வள கொள்ளையும் பெருகிவிட்டது இந்த விவகாரத்தில் அண்மையில் கிராம நிர்வாக அலுவலர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். ஆனால் அரசு கனிம வள கொள்ளையை தடுக்க முற்படாமல் இறந்தவரின் குடும்பத்திற்கு நிதி உதவி அளிக்கிறது.ஒரு உயிரின் விலை ஒரு கோடியும் ஒரு அரசு வேலையும் தானா இது போன்ற சம்பவங்களில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுத்தால் தான் அரசு அலுவலர்கள் பயமின்றி பணிபுரிவார்கள்.

12 மணி நேர வேலை மசோதா

அண்மையில் தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 12 மணி நேர வேலை மசோதாவுக்கு பொதுமக்களிடையே கடும் எதிர்ப்பு எழுந்ததால் உடனே அதை வாபஸ் பெறுகின்றனர். இது போன்று பொதுமக்கள் நலனை பற்றி யோசிக்காமல் தமிழக அரசு செயல்பட்டு வருகிறது. தமிழக நிதியமைச்சர் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன்  பேசியதை போன்ற ஆடியோ சமூக வலைதளங்களில் பரவி வருவதை பற்றிய கேள்விக்கு  பதில் அளித்த அவர் சி.பி.ஐ. மட்டுமில்லாமல் உச்சநீதி மன்ற நீதிபதி  தலைமையில் ஒரு குழு அமைத்து இந்த விசயத்தை விசாரிக்க வேண்டும்.

12 மணி நேர வேலை மசோதா: திமுக கூட்டணி கட்சிகளின் எதிர்ப்பை மீறி பேரவையில்  நிறைவேற்றம் | 12 hour working hour bill was passed despite opposition from  opposition parties - hindutamil.in

மேலும் படிக்க | கலைஞர் டிவியில் எனக்கு பங்கு இல்லை” அண்ணாமலைக்கு கனிமொழி எம்பி நோட்டீஸ்

பட்டியல் இன மக்களுக்கும் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்
சி.பி.ஐ விசாரணை கண்டிப்பாக வேண்டும் அதன் உண்மை தன்மை தெரிய வேண்டும் எனவும் திமுக தமிழகத்தில் ஜாதி ஒழிந்துவிடவே கூடாது என்று இருக்கிறார்கள் அதன் காரணமாக தான் கிறிஸ்தவர்களாக மாறிய பட்டியல் இன மக்களுக்கும் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என தீர்மானத்தை நிறைவேற்றி இருக்கின்றனர் தற்போது கிறிஸ்தவர்களாக மாறி இருக்கும் பட்டியல் இனத்தவர்கள் சமூகத்தில் சற்று உயர்ந்துள்ளனர் அவர்களை மீண்டும் கீழே இருக்கும் செயலாக இந்த இட ஒதுக்கீடு விவகாரத்தை திமுக செய்கிறது  இது சமூக நீதி கிடையாது... இது  சமூக அணிதி என்று அவர் குற்றம் சாட்டினார்