இதக்கூடவா திருடுவீங்க..? சிரிப்பை கிளப்பிய சி.சி.டி.வி. காட்சிகள்...

ராசிபுரம் அருகே மல்லிகை பூவை திருடி செல்லும் சிசிடிவி காட்சிகள் சிரிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதக்கூடவா திருடுவீங்க..? சிரிப்பை கிளப்பிய சி.சி.டி.வி. காட்சிகள்...
Published on
Updated on
1 min read

தமிழகத்தில் விதவிதமான திருட்டுகளை கேள்விபட்டுள்ளோம். ஆனால் இருசக்கர வாகனத்தில் வந்து மல்லிகை பூ - வை திருடி செல்லும் வினோத திருட்டு சம்பவம் ராசிபுரத்தில் நடைபெற்றுள்ளது. சாமி படத்திற்கு வைத்திருந்த பூவை திருடி சென்ற காட்சிகள் தற்போது இணையதளத்தில் பரவி வருவது வேடிக்கையாக உள்ளது.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அண்ணா சாலையில் உள்ள தனியார் வங்கி அருகில் செயல்பட்டுவரும் அலுவலகத்தின் வெளியே சாமி படத்திற்கு அணிவிக்க மாலை மற்றும் மல்லிகை பூவை பூக்கடைகார்கள் வைப்பது வழக்கம். காலை 10 மணிக்கு அலுவலகம் திறக்கப்படும் என்பதால் வாசலில் அதற்காக உள்ள மேடை மீது பூக்கடைகார்கள் பூவை வைத்து விட்டு செல்வார்கள்.

இந்நிலையில் கடந்த 24-ஆம் தேதி இருசக்கர வாகனத்தில் வந்த டிப்டாப் நபர் ஒருவர் செல்பேசியில் பேசுவது போல் நீண்ட நேரமாக அங்கே நின்றுகொண்டு, மல்லிகைப்பூவை திருடிகொண்டு இரு சக்கர வாகனத்தில் செல்லும் காட்சிகள் சிசிடிவி காட்சிகள் வெளியாகி சிரிப்பை ஏற்படுத்தியுள்ளது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com