வட்டி கேட்டு மிரட்டல் விடுத்தவரும், பொருட்களை சேதப்படுத்தியவரும் கைது.. அதிரடி ஆக்ஷன் எடுத்த காவல்துறை!!

கோத்தகிரி அருகே வட்டி கேட்டு மிரட்டல் விடுத்தவரையும், பொருட்களை சேதப்படுத்தியவரையும் காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

வட்டி கேட்டு மிரட்டல் விடுத்தவரும், பொருட்களை சேதப்படுத்தியவரும் கைது.. அதிரடி ஆக்ஷன் எடுத்த காவல்துறை!!

கோத்தகிரி எம்.கைகாட்டி பாண்டியன் நகரைச் சேர்ந்த அருளானந்தம் என்பவர், டானிங்டன் காந்தி நகரைச் சேர்ந்த அஜீத்குமாரிடம், 20 ஆயிரம் ரூபாய் கடன் பெற்றுள்ளார். குடும்ப சூழல் காரணமாக 6 மாதமாக வட்டி செலுத்தாத நிலையில், கோயிலுக்குச் சென்ற அருளானந்தத்தை வழிமறித்த அஜீத்குமார், வட்டி கேட்டு மிரட்டியுள்ளார்.

இது குறித்து அருளானந்தம் அளித்த புகாரின் பேரில், அஜீத் குமாரை கைது செய்த போலீசார், அவரிடமிருந்து ஐந்து லட்சத்து 47 ஆயிரம் ரூபாய் பணம், தொகை குறிப்பிடாமல் கையெழுத்து பெறப்பட்ட புரோ நோட்டுகள் எனப்படும் பேப்பர்களையும் பறிமுதல் செய்தனர்.

இதேபோல், காத்துக்குளி கிராமத்தில் கடை நடத்தி வரும் ராஜன், கட்டபெட்டு பகுதியைச் சேர்ந்த மதி என்பவரிடம் 10 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கியுள்ளார்.

இந்நிலையில், ஒன்றரை மாதம் வட்டி செலுத்தாததால், ராஜனின் கடைக்குச் சென்ற மதி, கடையில் இருந்த பொருட்களை தூக்கி வீசி தகராறு செய்துள்ளார். இது குறித்து ராஜன் அளித்த புகாரின் பேரில், கோத்தகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து மதியைக் கைது செய்தனர்.