தடை மீறி வைத்த விநாயகரை தண்ணீரில் கரைத்த போலீசார்!!!

தடைகளை மீறி வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலையை கைப்பற்றி, இந்து முன்னணி சார்பினரின் எதிர்ப்புகளைத் தாண்டி. போலீசார் தண்ணீரில் கரைத்தனர்.
தடை மீறி வைத்த விநாயகரை தண்ணீரில் கரைத்த போலீசார்!!!
Published on
Updated on
1 min read

திண்டுக்கல் செய்திதிண்டுக்கல்லில் தடையை மீறி இந்து முன்னணி சார்பில் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலையை போலீசார் கைப்பற்றி நீர் நிலையில் கரைத்தனர். சிலையை ஊர்வலமாககொண்டு செல்ல முயன்ற இந்து முன்னணியிருக்கும்  போலீசாருக்கும்  இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

திண்டுக்கல் வத்தலக்குண்டு சாலையில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வருடந்தோறும் ஊர் பொதுமக்கள் சார்பில் விநாயகர் சிலை வைத்து வழிபட அனுமதி உண்டு. ஆனால், இந்து அமைப்புகள் சார்பில் விநாயகர் சிலை வைக்க அனுமதி இல்லை. இருப்பினும் வருடம்தோறும் இந்து முன்னணி சார்பில் இப்பகுதியில் விநாயகர் சிலை வைக்கப்பட்டு ஊர்வலமாக கொண்டு செல்ல முயல்வார்கள்.

ஆனால், போலீசார் அதை தடுத்து நிறுத்தி விடுவது வழக்கம். இந்த வருடமும் வழக்கம் போல் பாறைப்பட்டி பகுதியில் உள்ள காளியம்மன் கோவில் வளாகத்தில் இந்து முன்னணி சார்பில் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலையை ஊர்வலமாக பாறைப்பட்டி பகுதி முழுவதும் சுற்றி வந்தனர். பின்னர் அந்த சிலையினை கோட்டை குளத்தில் கரைப்பதற்காக கொண்டு செல்ல முயன்றனர்.

அவர்களிடம் இருந்து சிலையை கைப்பற்றிய போலீசார், பலத்த பாதுகாப்போடு கோட்டை குளத்தில் கொண்டு சென்று கரைத்தனர். இதற்கிடையே ஊர்வலமாக செல்ல முயன்ற இந்து முன்னணியினருக்கும் போலீஸாருக்கும் இடையே  தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனை ஒட்டி ஏ டி எஸ் பி வெள்ளச்சாமி தலைமையில் நூற்றுக்கு மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com