ஒரு யூனிட் ஆற்று மணலின் விலை ரூ.1000 ஆக நிர்ணயம் - தமிழ்நாடு அரசு அறிவிப்பு!  

ஒரு யூனிட் ஆற்று மணலின் விலை ரூ.1000 ஆக நிர்ணயம்  செய்துள்ளதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. 

ஒரு யூனிட் ஆற்று மணலின் விலை ரூ.1000 ஆக நிர்ணயம் - தமிழ்நாடு அரசு அறிவிப்பு!  

ஒரு யூனிட் ஆற்று மணலின் விலை ரூ.1000 ஆக நிர்ணயம்  செய்துள்ளதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. 

ஏழை, எளிய பொதுமக்கள் வீடு கட்டுவதில் இன்றியமையாத பொருளாக இருக்கும் ஆற்றுமணலுக்கு அடிப்படை விலையை நிர்ணயம் செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதற்க்கு முன்னதாக குவாரிகளுக்கு டெண்டர் விடப்பட்டிருந்தால் மணல் அதிக விலைக்கு விற்கப்பட்ட நிலையில் தமிழ்நாடு அரசு புதிய நடவடிக்கை எடுத்துள்ளது. 

ஆற்றுப்படுகையில் இருந்து மணலை எடுத்து பொதுமக்களுக்கு விற்பனை செய்ய முடிவு செய்து தமிழ்நாடு அரசு புதிய வழிமுறைகளை நேற்று வெளியிட்ட நிலையில் ஒரு யூனிட் ஆற்று மணலுக்கான விலை ரூ.1000 ஆக நிர்ணயம் செய்துள்ளது. 

மேலும் ஆற்று மணல் விற்பனை 24 மணி நேரமும் சிசிடிவி கேமிராக்கள் மூலம் நேரடியாக கண்காணிக்கப்படும். இது முறைகேடுகள் ஏற்படுவதை தவிர்க்க உதவும் என்றும் தமிழக கூறப்படுகிறது.