சென்னையில் வீட்டு உபயோக சிலிண்டர் விலை ரூ.50 உயர்வு.. திடீர் விலை உயர்வால் பொதுமக்கள் அதிர்ச்சி!!

சென்னையில் வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 50 ரூபாய் அதிகரித்துள்ளது.

சென்னையில் வீட்டு உபயோக சிலிண்டர் விலை ரூ.50 உயர்வு.. திடீர் விலை உயர்வால் பொதுமக்கள் அதிர்ச்சி!!

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப உள்நாட்டில் கேஸ் சிலிண்டரின் விலையை பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன. அதன்படி கடந்த ஜுன் மாதத்தில் வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர் ஆயிரத்து 18 ரூபாய் 50 காசுகளுக்கு விற்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் தற்போது 50 ரூபாய் அதிகரித்து ஆயிரத்து 68 ரூபாய் 50 காசுகளுக்கு விற்கப்படுகிறது. வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் 2 ஆயிரத்து 186 ரூபாய்க்கு விற்பனையாகி வருகிறது. தொடர்ந்து வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டரின் விலை அதிகரித்து வந்த நிலையில், வீட்டு உபயோக சிலிண்டரின் விலையும் அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.