சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 520 ரூபாய் குறைவு!!

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 520 ரூபாய் குறைந்து ஒரு சவரன் 37 ஆயிரத்து 920 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 520 ரூபாய் குறைவு!!

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக அதிகரித்து காணப்பட்ட நிலையில், இன்று அதிரடியாக 520 ரூபாய் குறைந்துள்ளது.

அதன்படி, கிராமிற்கு 65 ரூபாய் குறைந்து, ஒரு கிராம் தங்கம் 4 ஆயிரத்து 740 ரூபாய்க்கு விற்பனையாகிறது. ஒரு சவரன் ஆபரண தங்கம் 37 ஆயிரத்து 920 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதேபோல் வெள்ளி கிராமிற்கு 2 ரூபாய் குறைந்துள்ளது. அதன்படி, ஒரு கிராம் வெள்ளி 62 ரூபாய் 50 காசுகளுக்கும், ஒரு கிலோ வெள்ளி 62 ஆயிரத்து 500 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. தங்கம் விலை குறைந்துள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.