திருச்செந்தூர் கோவிலில் காவலரைத் தாக்கிய அர்ச்சகரால் பரபரப்பு!!

திருச்செந்தூர் கோவிலில் காவலரைத் தாக்கிய அர்ச்சகரால் பரபரப்பு!!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்களை அர்ச்சகர்கள்  தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

அர்ச்சகர்கள் பணம் வாங்கிக் கொண்டு தவறான வரிசையில் அனுமதி

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு ஞாயிற்றுக்கிழமை  ஏராளமான பக்தர்கள் வந்தனர்.கோவிலில் கூட்டம் அதிகமாக காணப்பட்டதால் , இதைப் பயன்படுத்திக் கொண்ட அர்ச்சகர்கள் பக்தர்களிடம் பணத்தைப் பெற்றுக் கொண்டு தவறான வழியில் அழைத்து சென்றதாக கூறப்படுகிறது.

தடுத்து நிறுத்திய காவலர்கள் - அர்ச்சகர்கள் தகராறு

இதனை பாதுகாப்புப் பணியில் இருந்த காவலர்கள் தடுத்து நிறுத்தியதால் அர்ச்சகர்களுக்கும் காவலர்களுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து ,பத்துக்கும் மேற்பட்ட அர்ச்சகர்கள் ஒன்று கூடி காவலர்களின் சட்டையைப் பிடித்து இழுத்து தள்ளியதாக தெரிகிறது.. 

சாமி தரிசனம் செய்வதற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் உள்ள நிலையில் , அர்ச்சகர்களின் இந்த அடாவடித் தனத்தால் பக்தர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் பக்தர்களிடம் பணத்தை பெற்றாலும் உள்ளே அழைத்துச் செல்லாமல் ஏமாற்றுவதாகவும் அர்ச்சகர்கள் மீது குற்றம் சாட்டுகின்றனர். எனவே கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.