திருநள்ளாறில் வெகு விமரிசையாக நடைபெற்றது ஸ்ரீ தர்ப்பாரண்யேஸ்வரர் கோவில் தேரோட்டம்..!

காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறில் ஸ்ரீ தர்ப்பாரண்யேஸ்வரர் கோவில் தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது...

திருநள்ளாறில் வெகு விமரிசையாக நடைபெற்றது ஸ்ரீ தர்ப்பாரண்யேஸ்வரர் கோவில் தேரோட்டம்..!

காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறில் ஸ்ரீ தர்ப்பாரண்யேஸ்வரர் - சனீஸ்வர பகவான் தேவஸ்தானம் அமைந்துள்ளது. இங்கு தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களை சேர்ந்த பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர்.

புகழ்பெற்ற இத்தேவஸ்தானத்தில் வைகாசி விசாக பிரம்மோற்சவ விழா கடந்த மே 26ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதை தொடர்ந்து பல்வேறு விதமான அபிஷேகங்கள் மற்றும் வழிபாடுகள் நடத்தி, நாள்தோறும் சுவாமி புறப்பாடு நடைபெற்று வந்தது.  

தொடர்ந்து தேரோட்ட நிகழ்ச்சியையொட்டி தியாகேச பெருமான், தேருக்கு எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதன் பிறகு புதுச்சேரி சபாநாயகர் ஏம்பலம் செல்வம், புதுச்சேரி அமைச்சர் சந்திர பிரியங்கா, திருநள்ளாறு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பி.ஆர்.சிவா ஆகியோர் தேரை வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தினை தொடங்கி வைத்தனர்.

இதையடுத்து வினாயகர், முருகன், தியாகராஜர், நீலோத்தாம்பிகை, சண்டிகேஸ்வரர் என அலங்கரிப்பட்ட ஐந்து தேர்களையும் பக்தர்கள் வடம் பிடித்து திருநள்ளாறின் முக்கிய வீதிகளில் இழுத்து சென்றனர். இந்த நிகழ்ச்சிகளில் ஆயிரகணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபட்டனர். இதைத்தொடர்ந்து, பாதுகாப்பு பணியில் சுமார் 500க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.