பொதுமக்கள் அச்சம் இன்றி வாக்களிக்க வேண்டும் - மாநில தேர்தல் ஆணைய ர் பழனிகுமார்

9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் காலை 9மணி நேர நிலவரப்படி 7.72% வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளதாகவும், பொதுமக்கள் அச்சம் இன்றி வாக்களிக்க வேண்டும் எனவும் மாநில தேர்தல் ஆணைய ர் பழனிகுமார் தெரிவித்துள்ளார்.

பொதுமக்கள் அச்சம் இன்றி வாக்களிக்க வேண்டும் -  மாநில தேர்தல் ஆணைய ர் பழனிகுமார்

சென்னை கோயம்பேடு மாநில தேர்தல் ஆணையத்தில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறையில் இருந்து வாக்குச்சாவடிகளை ஆய்வு செய்த பின் செய்தியாளர்களை சந்தித்த அவர்..9 மாவட்டங்களில் 9மணி நிலவரப்படி 7.72%  வாக்குப்பதிவு நடைப்பெற்றுள்ளதாகவும்,7921வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடைப்பெற்று வருகிறது என்றும் கூறினார்.

மேலும், 3409 பதட்டம் நிறைந்த வாக்குச்சாவடிகள் கண்டறியப்பட்டுள்ளதாக கூறிய அவர், 1123 வாக்குச்சாவடிகள் வெப்ஸ்டீரிமிங் கேமரா பொருத்தப்பட்ட வாக்குச்சாவடிகள் என்றும் தெரிவித்தார்.மாநில தேர்தல் ஆணையத்தால் வழங்கப்பட்ட பூத் சிலிப் இல்லாதவர்கள் ஏற்கனவே தெரிவிக்கப்பட்டுள்ள 11 அடையாள அட்டை காண்பித்தும் வாக்களிக்கலாம் எனவும் அவர் கூறினார். பறக்கும் படையினர் மூலம் இதுவரை 97,98,095 ரூபாய் ரொக்கமாக பறிமுதல் செய்யப்பட்டுள்ளதோடு, 1551 புடவைகள், 1341 துண்டுகள், 100 மின்விசிறிகள், 250 பித்தளை விளக்குகள், 600 குங்குமச் சிமிழ்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், வாக்குச்சாவடிகள் அருகில் வாக்குச்சேகரிப்பவர்கள் மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளதாகவும், கிராம ஊராட்சி மன்ற தலைவர், கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கு சின்னங்கள் மட்டுமே இருக்கும், பெயர்கள் இடம்பெறாது என்றும் கூறினார். விழுப்புரம் மாவட்டம் பொன்னாங்குப்பம் பகுதியில் பொதுமக்கள் தேர்தலை புறக்கணித்துள்ளதால், காவல்துறையை அனுப்பி பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், மக்களின் கோரிக்கைகள் தேர்தல் முடிந்த பிறகு தனியாக பஞ்சாயத்து அமைப்பது குறித்து மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்த பின் தான் முடிவு செய்யப்படும் எனவும் குறிப்பிட்டார்.

தேர்தல் அமைதியாக நடைப்பெற்று வருவதாகவும்,அசம்பாவித சம்பங்கள் குறித்து தேர்தல் ஆணையத்திற்கு எந்த புகாரும் வரவில்லை என்றும்,வாக்காளர்கள் பயம் இன்றி அச்சம் இன்றி வாக்களிக்கலாம் எனவும், மாலை 5 மணிக்கு பின், மக்களுக்கு டோக்கம் அளிக்கப்பட்டு வாக்களிக்க நேரம் ஒதுக்கீடு செய்யப்படும் எனவும் தெரிவித்தார். நகர்புற தேர்தலுக்கான அனைத்து பூர்வாங்க பணிகளும் துவங்கப்பட்டுள்ளதாக கூறிய அவர், மின்னனு வாக்குப்பதிவு இயந்திரம் BELL நிறுவனத்திடம் இருந்து ஆய்வு செய்யும் பணியும் வரும் 17ம் தேதிக்கு பின் துவங்கப்படும் என்றும் அவர் கூறினார்.