டி ஷர்ட் திருடிய நபரை புரட்டி எடுத்த பொதுமக்கள்...

வேளாங்கண்ணியில் துணிக்கடையில் டி ஷர்ட் திருடிய இளைஞரை பொதுமக்கள் மற்றும் கடை ஊழியர்கள் அடித்து துவைத்த காட்சி வெளியாகி வைரலாகி வருகிறது.

டி ஷர்ட் திருடிய நபரை புரட்டி எடுத்த பொதுமக்கள்...

நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலய ஆண்டு திருவிழா வருகின்ற 29 ஆம் தேதி பக்தர்கள் இல்லாமல் தொடங்க உள்ளது. திருவிழாவிற்கு முன்னரே ஏராளமான பக்தர்கள் அங்கு குவிந்து வருகின்றன. இதனால் அப்பகுதியில் உள்ள கடை தெருவில் மக்கள் கூட்டம் அலை மோதுகிறது.

இதற்கிடையில் வேளாங்கண்ணி வந்த சென்னையை சேர்ந்த நபர் ஒருவர், கடற்கரை சாலை கடைத்தெருவில் உள்ள துணி கடையிக்குள் நுழைந்துள்ளார். துணி எடுப்பது போன்று உள்ளே சென்ற நபர், அங்கிருந்த டிஷர்டின் விலையை விசாரிப்பது போன்று லாவகரமாக திருடியுள்ளார். இதனை கண்ட கடை ஊழியர் டிஷர்ட் திருடிய நபரை கண்டித்ததாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த அந்த நபர் கடை ஊழியரை தாக்க தொடங்கியுள்ளார். அப்போது அங்கிருந்த சகஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் அவரை பிடித்து கடைக்குள் வைத்து புரட்டி எடுத்துள்ளனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பதற்றம் நிலவியது.