கரடி வேடத்தில் வந்து கைவரிசை.....மூதாட்டியை கட்டிப்போட்டுவிட்டு நகையை அபேஸ் செய்த கொள்ளையர்கள்....

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே நள்ளிரவில் சிறுநீர் கழிக்க சென்ற மூதாட்டியை கட்டிப்போட்டு விட்டு 6 பவுன் நகையை திருடி சென்ற கொள்ளையர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

கரடி வேடத்தில் வந்து கைவரிசை.....மூதாட்டியை கட்டிப்போட்டுவிட்டு நகையை அபேஸ் செய்த கொள்ளையர்கள்....

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள ஆவுடையம்மாள்புரம் பகுதியை சேர்ந்தவர் மாடசாமி. இவரது  மனைவி பார்வதியம்மாள்(55). மாடசாமி இறந்து விட பார்வதியம்மாள் தனது மகன் ராமகிருஷ்ணன், மருமகள் இசக்கியம்மாள் ஆகியோருடன் வசித்து வருகின்றார்.

இந்நிலையில் நேற்றிரவு ராமகிருஷ்ணன், அவரது மனைவி மற்றும் குழந்தைகளுடன் வழக்கம் போல தூங்கியுள்ளார். உள்ளே உள்ள அறையில் பார்வதியம்மாள் தூங்கியுள்ளார். அப்போது நள்ளிரவில் சிறுநீர் கழிப்பதற்காக வெளியே சென்ற பார்வதியம்மாளை, கரடி வேடமணிந்து வந்த மர்ம நபர்கள் இரண்டு பேர், மயக்க மருந்து கலந்த துணியை  பார்வதியம்மாள் முகத்தில் வைக்க சில நொடிகளில் அவர் மயக்கமடைந்தாகவும் கூறப்படுகிறது.

பின்னர் ஒரு மணி நேரம் கழித்து அரைமயக்கத்தில் இருந்த பார்வதியம்மாள் தான் அணிந்து இருந்த நைட்டி பையில் வைக்கப்பட்டு இருந்த செல்போனில் கைபட, அந்த போனில் இருந்து பார்வதியம்மாள் வீட்டின் அருகே உள்ள அவரது சகோதிரி மகள் கணபதிக்கு அழைப்பு சென்றுள்ளனது. இதனை பார்த்த அவர் வெளியே வந்த பார்த்த போது, பார்வதியம்மாள் வீட்டின் அருகே இருக்கும் மற்றொரு வீட்டின் முன் பகுதியில்   கட்டப்பட்டு அரை மயக்கதில் இருப்பதை கண்டு அதிர்ச்சிடைந்து, தூங்கி கொண்டு இருந்த பார்வதியம்மாள் மகன், மருமகளை எழுப்பியுள்ளார்.

ஓடி வந்த அவர்கள் கயிற்றால் கட்டப்பட்டு இருந்த பார்வதியம்மாளை மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். மேலும் வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது வீட்டின் பீரோவில் இருந்த 6பவுன் தங்க நகை காணமால் போய் இருந்தது தெரியவந்துள்ளது.

இது தொடர்பாக நாலாட்டின்புதூர் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற  போலீசார் விசாரணை நடத்தினர். மேலும் கிராமத்தில் உள்ள சிசிடிவி கண்காணிப்பு கேமரா காட்சிகளையும் ஆய்வு செய்தனர். அதில் சந்தேகப்படும் படி யாரும் வரவில்லை என்றும், புகார் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.