
டிவிஎஸ் மேடு பகுதியில் 20க்கும் மேற்பட்ட வடமாநில குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் அப்பகுதியில் வசித்து வந்த சுபஜித் என்பவரும் அதே பகுதியைச் சேர்ந்த 18 வயது நிறைவடையாத 10ம் வகுப்பு மாணவியும் காதலித்து வந்தனர். தொடர்ந்து இருவரும் திருமணம் செய்து கொண்ட நிலையில் பெண் வீட்டார் தரப்பில் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
இந்நிலையில் சுபஜித்தை வேலைக்கு அழைப்பதற்காக சிலர் அவரது வீட்டுக்குச் சென்ற போது, அவரது அறையில் புதுமணத் தம்பதியினர் தூக்கிட்டு தற்கொலை செய்தது தெரிய வந்தது.
இதையடுத்து சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்திய போது, பெண் வீட்டார் புகார் அளித்ததால் அச்சத்தில் இருவரும் இறந்ததாக கூறப்படுகிறது. இதனிடையே இறப்பதற்கு முன், தன் காதலியைப் பற்றி சுபஜித் உருக்கமாக எழுதிய காதல் கடிதத்தைக் கொண்டும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.