பாதுகாப்பு கேட்டு காவல் நிலையத்தில் தஞ்சமடைந்த காதல் ஜோடி...

நாமக்கல் மாவட்ட காவல் கண்காளிப்பாளர் அலுவலகத்தில் பாதுகாப்பு கேட்டு காதல்ஜோடி தஞ்சம் அடைந்தனர்.

பாதுகாப்பு கேட்டு காவல் நிலையத்தில் தஞ்சமடைந்த காதல் ஜோடி...

திருச்செங்கோடு அடுத்த செளதாபுரம் அருகே உள்ளா மக்கிரிப் பாளையத்தை சேர்ந்த காதல் ஜோடி கவின், இவர்கள் இருவரும் கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் படிக்கும் போதே காதலித்து வந்துள்ளனர். இதற்கிடையில் இவர்களின் காதல் விவகாரம் பெண்ணின் வீட்டார்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அவர்களின் எதிர்ப்பையும் மீறி இருவரும்  நேற்று திருச்செங்கோடு வால்ரைகேட் ரோட்டில் உள்ள விநாயகர்  கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். 

இந்த நிலையில் பெண்ணின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்களால் அச்சுறுத்தல் ஏற்படும் என்பதால் காதல் ஜோடிகள் இருவரும் இன்று நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலத்திற்கு  சென்று பாதுகாப்பு கேட்டு புகார் மனு அளித்தனர்.

அதில் நாங்கள் காதலித்து திருமணம் செய்து கொண்டோம். இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் பெண்ணின்  பெற்றோர்கள், உறவினர்களால் தங்களின் உயிருக்கு  பாதிப்பு ஏற்படும் எனவே தங்களுக்கு காவல்துறை சார்பில் பாதுகாப்பு வழங்க வேண்டும் கூறியிருந்தனர். மனுவை பெற்று கொண்ட போலீசார் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.