அரசு பள்ளியின் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து.. பள்ளி மாணவி ஒருவருக்கு காயம் என பொதுமக்கள் புகார்!!

அரசு பள்ளியின் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து.. பள்ளி மாணவி ஒருவருக்கு காயம் என பொதுமக்கள் புகார்!!

வந்தவாசி அருகே அரசு பள்ளியின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் மாணவி ஒருவருக்கு காயம் ஏற்பட்டது குறித்து  விசாரிக்கப்பட்டு வருகிறது.

அரசு பள்ளியின் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து

தெள்ளார் பகுதியில் அரசினர் மகளிர் உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு சுமார் 280 மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த நிலையில், பள்ளிக்குச் சென்ற ஒன்பதாம் வகுப்பு படிக்கும்  மாணவி மோனிகா மீது சிமெண்ட் பூச்சுகள் விழுந்து காயம் ஏற்பட்டது.

பெற்றோர்கள் வேதனை

கடந்த 2 மாதத்திற்கு முன்பு பள்ளி கட்டடத்தை இடிக்ககோரி மாவட்ட நிர்வாகம் உத்தரவு பிறப்பித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என பெற்றோர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

மாவட்ட நிர்வாகத்திற்கு பெற்றோர்கள் கோரிக்கை

எனவே மாவட்ட நிர்வாகம் இதில் தலையிட்டு, ஆபத்தான முறையில் இருக்கும் பள்ளி கட்டடத்தை அகற்றிவிட்டு புதிய கட்டடம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.