பள்ளி மாணவிகளை பாதுகாக்க வேண்டும்... பள்ளிக்கல்வித்துறை உத்தரவு...

9-12ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டதையொட்டி, பாலியல் சீண்டல்களில் இருந்து மாணவிகளை பாதுகாக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

பள்ளி மாணவிகளை பாதுகாக்க வேண்டும்... பள்ளிக்கல்வித்துறை உத்தரவு...

பள்ளிகளில் பாலியல் சீண்டல்களில் இருந்து மாணவிகளை பாதுகாப்பதற்கான வழிகாட்டுதல்களை உடனடியாக அமல்படுத்துமாறு அனைத்து பள்ளிகளுக்கும் பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில்,  9 முதல் 12 ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளதால், பள்ளிகளில் மாணவிகளின் பாதுகாப்புக்கு பெண் எஸ்.பி. , அளவிலான போலீஸ் அதிகாரி, சமூக பாதுகாப்பு அலுவலர், சட்ட அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர், உளவியல் நிபுணர் உள்ளிட்டோர் அடங்கிய குழுவை உடனடியாக அமைக்க உத்தரவிடப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது.

மேலும், பள்ளிகளில் புகார் பெட்டி அமைத்தல், அருகாமையில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலைய தொடர்பு எண்களையும் பள்ளி வளாகத்தில் வெளியிடுதல் போன்ற பணிகளை துரித கதியில் செயல்படுத்த வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.