இலங்கையின் நிலை இந்தியாவுக்கும் வரும்.. பாஜக ,ஆர்எஸ்எஸ் அமைப்பு உணர வேண்டும் - தொல்.திருமாவளவன்

இலங்கையின் நிலை இந்தியாவுக்கும் வரும்.. பாஜக ,ஆர்எஸ்எஸ் அமைப்பு உணர வேண்டும் - தொல்.திருமாவளவன்

இலங்கையின் நிலை இந்தியாவுக்கும் வரும் என்பதை பாஜக உணர வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் ஆரூடம் தெரிவித்துள்ளார்.
Published on

கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக விமானம் மூலம் தூத்துக்குடிக்கு வருகை தந்தார் திருமாவளவன்.  அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த அவர்,

இலங்கையில் மகிந்த ராஜபக்சே பதவியிலிருந்து விலகும் நிலை மக்களின் போராட்டத்தால் நிகழ்ந்திருக்கிறது என தெரிவித்தார். மக்கள் சக்தி மகத்தான சக்தி என்பதை இலங்கை வாழ் மக்கள் உலகுக்கு உணர்த்தியிருக்கிறார்கள் என்றும் திருமா கூறினார்.

இது இந்தியாவுக்கும் ஒரு படிப்பினை என கூறிய திருமாவளவன், இலங்கையில் நிகழ்ந்தது இந்தியாவில் நிகழும் என்பதை பா.ஜ.க-வைச் சார்ந்தவர்கள், சங்பரிவார் அமைப்பைச் சார்ந்தவர்கள், ஆட்சியில் இருப்பவர்கள் உணர்ந்துகொள்ள வேண்டும் என  சுட்டிக்காட்டினார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com