உள்ளாடைக்குள் மறைத்து கடத்தி வரப்பட்ட தங்கப்பசை...! சென்னை விமான நிலையத்தில் அடுத்தடுத்து 2 பயணிகள்...?

உள்ளாடைக்குள் மறைத்து கடத்தி வரப்பட்ட தங்கப்பசை...! சென்னை விமான நிலையத்தில் அடுத்தடுத்து 2 பயணிகள்...?

துபாய், அபுதாபி போன்ற நாடுகளிலிருந்து சென்னைக்கு கடத்திரவப்பட்ட பல லட்சம் மதிப்புள்ள தங்கப்பசையை சென்னை விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். 

சென்னை  பன்னாட்டு விமான நிலையத்திற்கு துபாயில் இருந்து  வந்த பயணிகளை, சென்னை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனா். அப்போது சென்னையைச் சேர்ந்த ஒரு ஆண் பயணி மீது சந்தேகம் ஏற்பட்டது. அவரை நிறுத்தி விசாரித்தபோது, முன்னுக்கு பின் முரணாக பேசியுள்ளார். இதையடுத்து சுங்கத்துறை அதிகாரிகள், அவரிடம் சோதனை நடத்திய போது உள்ளாடைக்குள் மறைத்து வைத்த 3 பார்சல்களை எடுத்தனா். அதில் 690 கிராம் தங்கப் பசையை மறைத்து வைக்கப்பட்டிருந்தனர். அதன் மதிப்பு ரூ.30.5 லட்சம் என கூறுகின்றனர். இதையடுத்து சுங்கத்துறை அதிகாரிகள் தங்கப் பசையை பறிமுதல் செய்தனர். பின்னர் அந்த சென்னை பயணியை  கைது செய்தனர்.

இந்நிலையில் அபுதாபியில் இருந்து எத்தியாடு பயணிகள் விமானம், சென்னை பன்னாட்டு விமான நிலையத்திற்கு வந்தது. அதில் வந்த சிவகங்கை பயணி மீது சந்தேகம் ஏற்பட்டது. அவரையும் நிறுத்தி சோதித்தனர். அதே போன்று அவரும் உள்ளாடைக்குள் மறைத்து வைத்திருந்தார். அதிலிருந்த 685 கிராம் தங்கப் பசையை சுங்கத்துறை அதிகாரிகள் கைப்பற்றினா். அதன் மதிப்பு ரூ.30 லட்சம். இதை அடுத்து சுங்கத்துறை அதிகாரிகள் அவரையும் கைது செய்து தங்கப் பசையை கைப்பற்றினார்.

சென்னை விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் அடுத்தடுத்து நடத்திய சோதனைகளில் ரூ60.5 லட்சம் மதிப்புடைய 1.3 கிலோ தங்கப்பசை பறிமுதல் செய்யப்பட்டு, சென்னை, சிவகங்கையை  சேர்ந்த 2  பயணிகளை கைது செய்யதுள்ளது குறிப்பிடத்தக்கது.