பொதுத்தேர்வு எழுதும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு கூடுதல் சலுகைகள்...!

பொதுத்தேர்வு எழுதும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு கூடுதல் சலுகைகள் வழங்கி, மாநில தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது.

பொதுத்தேர்வு எழுதும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு கூடுதல் சலுகைகள்...!

மாற்றுத்திறனாளி மாணவர்களின் சிரமத்தைக் கருத்தில் கொண்டு, 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு, கூடுதல் சலுகைகளை வழங்கிட தமிழ்நாடு தேர்வுத்துறை ஆணை பிறப்பித்துள்ளது.

அதன்படி, மாற்றுத்திறனாளி மாணவர்கள் சொல்வதைக் கேட்டு எழுதுபவருக்கு கூடுதலாக ஒரு மணி நேரம் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அதேபோல், மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு மொழிப்பாடத்தில் விலக்கு அளித்து தேர்வுத்துறை புதிய உத்தரவு பிறப்பித்துள்ளது.

10ஆம் வகுப்பில் அறிவியல் பாட செய்முறைத் தேர்வில் விலக்கு கோரும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு, செய்முறைத் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.  11 மற்றும் 12ஆம் வகுப்பு பயிலும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு செய்முறைத் தேர்வின் போது ஆய்வக உதவியாளரை பணியமர்த்திக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மேலும், மாற்றுத்திறனாளி மாணவர்கள் மாடிகளுக்குச் செல்வதில் உள்ள சிரமத்தைப் போக்க, தரை தளத்திலேயே தேர்வெழுத அனுமதிக்கப்பட்டுள்ளது. அதேபோல், தேர்வுக்கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு உள்ளிட்ட சலுகைகளையும் மாநில தேர்வுத்துறை, மத்திய கல்வி வாரியத்தின் சலுகைகளைப் பின்பற்ற முடிவு செய்து, ஆணை பிறப்பித்துள்ளது.