வாக்காளர் அடையாள அட்டை எண்ணுடன், ஆதார் எண்ணை இணைக்கும் பணி...!

ஓமலூர் சட்டமன்ற தொகுதியில் உள்ள அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் வாக்காளர் அடையாள அட்டை எண்ணுடன், ஆதார் அட்டை எண்ணை இணைக்கும் சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது.

வாக்காளர் அடையாள அட்டை எண்ணுடன், ஆதார் எண்ணை இணைக்கும் பணி...!

நாடு முழுவதும் வாக்காளர் அடையாள அட்டை எண்ணுடன், ஆதார் அடையாள அட்டை எண்ணை இணைக்கும் சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது. ஓமலூர் சட்டமன்ற தொகுதியில் உள்ள ஓமலூர், காடையாம்பட்டி ஆகிய இரண்டு தாலுக்காவிலும் உள்ள அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் சிறப்பு முகாம்கள் நடைபெற்று வருகிறது. இந்த முகாமில் அந்தந்த பகுதியை சேர்ந்த வாக்காளர்கள், தங்கள் ஆதார் எண் மற்றும் வாக்காளர் எண் ஆகியவற்றை கொடுத்து இணைத்து வருகின்றனர். போலியாக உள்ள வாக்காளர்களை நீக்குவதற்கும், வேறு தொகுதிக்கு இடம் மாறியவர்களை, முகவரி மாற்றம் செய்தவர்களை அடையாளம் கண்டு மாற்றம் செய்யும் வகையிலும், கள்ள ஓட்டுகளை தவிர்க்கும் வகையிலும், வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைத்து வருகின்றனர். இப்படி இணைப்பதனால், இரண்டு இடங்களில் வாக்காளர் அடையாள அட்டை வைத்திருந்தால், ஒரு வாக்காளர் அடையாள அட்டை மட்டுமே செல்லும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

தற்போது ஆதார் எண்ணுடன், வாக்காளர் எண்ணை இணைக்கும் பணி நடைபெற்று வருகிறது. ஓமலூர் அரசு பள்ளி, வேலாசாமி செட்டியார் மேல்நிலைப்பள்ளி, பாத்திமா மகளிர் மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட ஓமலூர் தொகுதி முழுவதும் பொதுமக்கள் ஆர்வமுடன் தங்களது வாக்களர் அடையாள அட்டை எண்ணுடன், ஆதார் எண்ணுடன் இணைத்து வருகின்றனர். மேலும், ஆதார் எண்ணை இணைக்காத நபர்களை, வாக்குச்சாவடி மைய அலுவலர்கள் கண்டறிந்து, அவர்களின் வீட்டுக்கே நேரில் சென்று வாக்காளர் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைத்து வருகின்றனர். வாக்காளர்கள் ஆன்லைன் மூலமாகவும் இணைத்துக்கொள்ளும் வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.