பள்ளியில் இடைநின்ற மாணவர்களின் விவரங்கள் கணக்கெடுக்கும் பணி...! சுற்றறிக்கை அனுப்பிய ஒருங்கிணைந்த பள்ளி கல்வித்துறை...!

பள்ளியில் இடைநின்ற  மாணவர்களின் விவரங்கள் கணக்கெடுக்கும் பணி...! சுற்றறிக்கை அனுப்பிய ஒருங்கிணைந்த பள்ளி கல்வித்துறை...!

2022-2023 ஆம் கல்வி ஆண்டில் 1 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பள்ளியில் இடைநின்ற  மாணவர்களின் விவரங்களை சேகரிக்க வேண்டும் என ஒருங்கிணைந்த பள்ளி கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. 100% மாணவர் சேர்க்கையை உறுதி செய்யும் விதமாக ஆண்டு தோறும் பள்ளிகளில் இருந்து இடைநிற்கும் மாணவர்களின் விவரங்களை சேகரித்து, அவர்களை மீண்டும் பள்ளிகள் அல்லது சிறப்பு வகுப்பில் சேர்க்கப்பட்டு வருகின்றனர்.

அந்த வகையில் 2022-2023 ஆம் ஆண்டில் பள்ளி செல்லாத அல்லது இடை நின்ற மாணவர்களை கண்டறிந்து அவர்களின் விவரங்களை சேகரிக்க வேண்டும் எனவும் சேமித்த விவரங்களின் அடிப்படையில் மாணவர்களின் வீட்டிற்கே நேரடியாக சென்று அவர்களை மீண்டும் பள்ளியில் சேர்க்க களப்பணி ஆற்ற வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், டிசம்பர் 19ஆம் தேதி முதல், தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் தன்னார்வலர்கள் மூலமாக குழுக்கள் அமைத்து இடைநின்ற மாணவர்கள் விவரங்களை சேகரிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வருகிற 19.12. 2022 முதல் 11.01.2023 வரை கணக்கெடுப்பு களப்பணி மேற்கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. முன்னறிவிப்பின்றி தொடர்ந்து 30 நாட்கள் பள்ளிக்கு வராத மாணவர்கள், அதிகமாக விடுமுறை எடுத்து பள்ளியிலிருந்து இடை நின்ற மாணவர்கள் ஆகியோர் பள்ளி செல்லாக் மாணவர்களாக கருதப்படுவது குறிப்பிடத்தக்கது. 

இதையும் படிக்க : மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க கால அவகாசம் நீட்டிப்பு - அமைச்சர் செந்தில் பாலாஜி