ரொம்ப ஸ்ட்ரிக்ட்...புள்ளிங்கோ ஸ்டைலில் பள்ளிக்கு வந்த மாணவர்...சிகை அலங்காரம் செய்த ஆசிரியர்!

ரொம்ப ஸ்ட்ரிக்ட்...புள்ளிங்கோ ஸ்டைலில் பள்ளிக்கு வந்த மாணவர்...சிகை அலங்காரம் செய்த ஆசிரியர்!

Published on

பள்ளிக்கு அறிவுறுத்தல்களை மீறி விதவிதமான முடியுடன் வந்த மாணவர்களுக்கு ஆசிரியர் ஒருவர் சொந்த செலவில் சிகை அலங்காரம் செய்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

திருவள்ளூர் மாவட்டம் திருவூர் அரசு மாதிரி உயர்நிலைப் பள்ளியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பள்ளி நிர்வாகம் சார்பில் பெற்றோர்களுக்கு மாணவர்கள் மூலம் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டது. அதன்படி, பள்ளிக்கு வரும் மாணவர்கள் கையில் மோதிரம் அணிந்து வரக்கூடாது, சீருடை ஒரே மாதிரியாக இருக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டிருக்கிறது.

ஆனால், பள்ளி நிர்வாகத்தின் அறிவுறுத்தல்களை மீறி புல்லிங் கோ ஸ்டைலில் முடி வைத்துக்கொண்டு பள்ளிக்கு வருகை புரிந்த மாணவர்களுக்கு அப்பள்ளியின் ஆசிரியர் அருணன் என்பவர், தனது சொந்த செலவில் சிகை அலங்காரம் செய்துள்ளார்.

மேலும் முழுக்கால் சட்டையை முக்கால் கால் அளவிற்கு விதவிதமாக பள்ளிக்கு அணிந்து வந்த ஒன்பதாம் வகுப்புக்கு மேல் உள்ள மாணவர்கள் 50 பேருக்கு டெய்லரை பள்ளிக்கு வரச் சொல்லி ஒரே மாதிரியான சீருடையையும் தைத்து தந்திருக்கிறார். மேலும், புள்ளிங்கோ ஸ்டைலில் முடி வைத்திருந்த மாணவர்கள் அனைவருக்கும் போலீஸ் கட்டிங் செய்த ஆசிரியரின் இந்த செயல் இணையதளத்தில் வேகமாக பரவி வருகிறது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com