ஆற்றில் அடித்து செல்லப்பட்ட தட்டிபாலம்.. கிராம மக்கள் வேதனை..!

நன்னிலம் அருகே ஆற்றில் அடித்து செல்லப்பட்ட தட்டிபாலத்தால் கிராம மக்கள் வேதனை..!

ஆற்றில் அடித்து செல்லப்பட்ட தட்டிபாலம்..  கிராம மக்கள் வேதனை..!

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே உள்ள  நெடுங்குளம் கோவில்பத்து  கிராமத்தில் 40-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த தட்டிப் பாலத்தை கிராம மக்கள் பல வருடங்களாக பயன்படுத்தி வந்தனர்.மேலும் இக்கிராம மக்கள் தொடர்ந்து கான்கிரீட் பாலம் வேண்டும் என பலமுறை புகார் மனு அளித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் ஊராட்சி நிர்வாகம் மற்றும் மாவட்ட நிர்வாகம் அலட்சியம்  காட்டி வருவதாக புகார் தெரிவித்துள்ளனர்.

ஆற்றில் தண்ணீரின் அளவு தற்போது அதிகரித்துள்ளதால் தட்டிப் பாலம் ஆற்றுநீரில் அடித்து செல்லப்பட்டுள்ளது. இதனால் கிராம மக்கள் ஒரு கிலோமீட்டர் தூரம் சுற்றி செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இப்பகுதியில் பள்ளி மாணவர்கள், வேலைக்கு செல்வோர் மிகவும் சிரமத்திற்கு ஆளாகி வருவதாக கிராம மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

எனவே கிராம மக்களின் வாழ்வாதாரத்தை கவனத்தில் கொண்டு உடனடியாக தற்காலிகமாக பாலம் அமைத்து தர வேண்டும்  என கோரிக்கை விடுத்துள்ளனர்.