நின்றிருந்த பெண்கள் மீது மோதிய வேன்... சம்பவ இடத்திலேயே பலியான பரிதாபம்...

பேருந்திற்காக காத்திருந்த இரண்டு பெண்கள்  மீது வேன் மோதி சம்பவ இடத்திலேயே பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நின்றிருந்த பெண்கள் மீது மோதிய வேன்... சம்பவ இடத்திலேயே பலியான பரிதாபம்...

அரவக்குறிச்சி அருகே ஆறு ரோடு பகுதியில் கரூர் உழவர் சந்தைக்கு செல்ல பேருந்திற்காக காத்திருந்த இரண்டு பெண்கள்  மீது வேன் மோதி சம்பவ இடத்திலேயே பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி வட்டம் கரூர் திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஆறு ரோடு அருகே பெரியம்மாள் (வயது 70) சுக்காம்பட்டி, லட்சுமி (வயது 65) ஆறு ரோடு பகுதியைச் சார்ந்த இரு பெண்களும் கரூர் உழவர் சந்தைக்கு காய்கறி விற்பனை செய்வதற்காக காய்கறிகளை எடுத்துக்கொண்டு ஆறு ரோடு பகுதியில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் காத்துக் கொண்டிருந்தனர்.

அப்போது திடீரென அப்பகுதியில் மீன் ஏற்றி வந்து கரூர் நோக்கி வந்துகொண்டிருந்த வேன் பேருந்திற்காக காத்துக் கொண்டிருந்த பெண்கள் மீது மோதியது.  இதில் 2 பெண்களும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இச்சம்பவம் குறித்து அரவக்குறிச்சி போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இருவரின் உடலையும் மீட்ட  போலீசார் உடற்கூறு ஆய்வுக்காக கரூர் காந்தி கிராமத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.