சுவர் இடிந்து விழுந்து சிறுமி பலி... சோகத்தில் மூழ்கிய கிராம மக்கள்...! 

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மண் வீட்டின் சுவர் இடிந்து விழுந்து 3 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார். 
சுவர் இடிந்து விழுந்து சிறுமி பலி... சோகத்தில் மூழ்கிய கிராம மக்கள்...! 
Published on
Updated on
1 min read

விருதுநகர் மாவட்டத்தில் கடந்த ஓரு வாரத்திற்கும் மேலாக கனமழை பெய்து வருகிறது. இதனால் ஆங்காங்கு வெள்ளம் தேங்கி நிற்கிறது. நேற்றும் ஸ்ரீவில்லிப்புத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த மழை கொட்டித்தீர்த்தது. இதனால் மண் வீடுகள் பல சேதமடைந்தன. 

இந்தநிலையில், காடனேரி கிராமத்தில் வசித்து வரும் காளீஸ்வரன் என்பவரது வீட்டின் ஒரு பக்க சுவர் திடீரென இடிந்து, அவரது 3 வயது மகள் முத்தீஸ்வரி மீது விழுந்தது. இதனை கண்ட உறவினர்கள் சிறுமியை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். 

சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரிக்கின்றனர். சுவர் இடிந்து விழுந்து சிறுமி பரிதாபமாக உயிரிழந்தது கிராம மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 
 

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com