திருவண்ணாமலை மலை மீது ஏற கலைஞர் கருணாநிதி அரசு கலைக் கல்லூரியில் அனுமதி சீட்டு வழங்கப்பட்ட போது சுவர் இடிந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத்தை முன்னிட்டு, இரண்டாயிரத்து 668 அடி உயர மலை மீது இன்று மாலை மகா தீபம் ஏற்றப்படவுள்ளது. இதனை நேரில் காண இரண்டாயிரத்து 500 பக்தர்களுக்கு மட்டும் கலைஞர் கருணாநிதி அரசு கலைக் கல்லூரியில் அடையாள அட்டை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த அடையாள அட்டைகளை பெற உள்ளூர், வெளியூர் மற்றும் வெளி மாநில பக்தர்கள் கல்லூரி வளாகத்தில் கூடியிருந்த போது எதிர்பாராத விதமாக சுவர் இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் பக்தர்கள் யாருக்கும் எவ்வித தீங்கும் நிகழவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.