மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்வு - விவசாயிகள் மகிழ்ச்சி  

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மணிமுத்தாறு அருவியில் பொங்கி வரும் தண்ணீரால், அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. இதனால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்வு - விவசாயிகள் மகிழ்ச்சி   

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள முக்கியஅருவிகளில் ஒன்றான மணிமுத்தாறு அருவி, மணிமுத்தாறு வனசோதனை சாவடியில் இருந்து 4 கிலோ மீட்டர் தூரம் தொலைவில் உள்ளது.  இந்த அருவிக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகள், அருவியில் ஆனந்த குளியலிட்டு மகிழ்வர். ஆனால் கடந்த ஒன்றரை வருடங்களாக கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் ஒரு வாரமாக லேசான மழை பெய்து வந்த நிலையில், மணிமுத்தாறு அருவியில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. விநாடிக்கு 5 ஆயிரம் கன அடி வீதத்தில் பொங்கி வரும் தண்ணீரால், மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. இதனால் அப்பகுதி மக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

நீலகிரி மாவட்டத்தில் பெரும்பாலான பகுதிகளில் கனமழை பெய்தது. அதிகபட்சமாக பந்தலுாரில் 15 சென்டி மீட்டரும், தேவாலாவில் 8 சென்டி மீட்டரும் மழை பதிவாகியுள்ளது. மழை தொடர்வதால் மீட்புக் குழுவினர் தயார் நிலையில் உள்ளதாகவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 456 முகாம்கள் தயார் நிலையில் இருப்பதாகவும், அம்மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா கூறியுள்ளார்.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக பரவலாக மழை பெய்து வருவதால், அங்குள்ள வரட்டுப்பள்ளம் அணையின் நீர்மட்டம் 8 அடி உயர்ந்து 32 அடியை எட்டியுள்ளது. உச்ச நீர்மட்டம் 33 புள்ளி 47 அடி கொண்ட அணை, இன்னும் ஓரிரு நாட்களில் நிரம்பி விடும் நிலையில் உள்ளதால், அப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதைப்போல அந்தியூர் அருகே உள்ளே எண்ணமங்கலம் எரிக்கும் அதிகளவு தண்ணீர் வந்ததன் காரணமாக, பாதியளவுக்கு மேல் ஏரி நிரம்பியுள்ளது.