குறைந்து வரும் மேட்டூர் அணையின் நீர்மட்டம்.. வரத்து குறைந்துள்ளதால் அணையின் நீர்மட்டம் சரிவு!

பாசனத்திற்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ள நிலையில், மேட்டூர் அணையின் நீர்மட்டம் குறைந்து வருகிறது.

குறைந்து வரும் மேட்டூர் அணையின் நீர்மட்டம்.. வரத்து குறைந்துள்ளதால் அணையின் நீர்மட்டம் சரிவு!

மேட்டூர் அணையில் இருந்து பாசனத்துக்காக கடந்த 24ம் தேதியன்று தண்ணீர் திறந்து விடப்பட்டது.

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியாக பெய்த கனமழை காரணமாக, அணைக்கு நீர்வரத்து அதிகமாக இருந்தது.

தற்போது மழை குறைந்துள்ள நிலையில், மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு நாளுக்குநாள் குறைந்துகொண்டே வருகிறது. நீர்வரத்து இன்று வினாடிக்கு 3 ஆயிரத்து 37 கன அடியில் இருந்து 2 ஆயிரத்து 770 கன அடியாக குறைந்துள்ளது.

மேட்டூர் அணையின் நீர்மட்டம் தற்போது 116 புள்ளி 59 அடியாக உள்ளது. 88 புள்ளி 13 டி. எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ள நிலையில், டெல்டா பாசனத்துக்காக விநாடிக்கு 10 ஆயிரம் கனஅடி வீதம் நீர் வெளியேற்றப்படுகிறது. தண்ணீர் வெளியேற்றத்தை விட, நீர்வரத்து குறைவாக உள்ளதால், அணையின் நீர் மட்டம் குறைந்து வருகிறது.