வைகையில் இறங்கி தற்கொலை முயற்சி... சமாதானம் பேசி பெண்ணை மீட்ட போலீசார்... 

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை வைகை ஆற்றில் இறங்கி தற்கொலைக்கு முயன்ற பெண்ணை சமாதானமாக பேசி போலீசார் மீட்ட சம்பவம், சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.
வைகையில் இறங்கி தற்கொலை முயற்சி... சமாதானம் பேசி பெண்ணை மீட்ட போலீசார்... 
Published on
Updated on
1 min read

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை வைகை ஆற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்ற பெண்ணை சமாதானமாக பேசி போலீசார் மீட்ட சம்பவம் வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. மானாமதுரை பிருந்தாவனம் நகரைச் சேர்ந்த ஆனந்தன் மனைவி மல்லிகா (35) திருமணம் ஆகிய 13 வருடங்கள் ஆகிறது. கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக நேற்று மாலை வைகை ஆற்றில் இறங்கி தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

வைகை அணையில் இருந்து திறக்கப்பட்ட 7 ஆயிரம் கன அடி தண்ணீர் சென்று கொண்டிருந்த நிலையில் அவ்வழியாக சென்ற பொதுமக்கள் மானாமதுரை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். பணியில் இருந்த பாலமுருகன், ராஜேஷ் ஆகிய இரு போலீசாரும் ஆற்றில் இறங்கி அந்த பெண்ணை சமாதானமாக பேசி கரைக்கு அழைத்து வந்தனர். பின் பெண்ணின் கணவரை வரவழைத்து கவுன்சிலிங் கொடுத்து வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். போலீசாரின் இந்த செயல் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com