அமைச்சர் நிகழ்ச்சியில் தீக்குளிக்க முயற்சித்த பெண்... நீலகிரி மாவட்டத்தில் பரபரப்பு...

நீலகிரி மாவட்டத்தில் வனத்துறை அமைச்சர் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் பெண் ஒருவர் தீக்குளிக்க முயற்சி செய்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
அமைச்சர் நிகழ்ச்சியில் தீக்குளிக்க முயற்சித்த பெண்... நீலகிரி மாவட்டத்தில் பரபரப்பு...
Published on
Updated on
1 min read

உதகை அருகே உள்ள குந்தா எனும் பகுதியில் மக்களைத் தேடி மக்களின் அரசு என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியின் போது அந்த வளாகத்தில் திடீரென ஒரு பெண் பெட்ரோல் ஊற்றி பற்ற வைக்க முயற்சி செய்தார். உடனடியாக அருகில் இருந்த காவலர்கள் மற்றும் பொதுமக்கள் பெட்ரோலை கைப்பற்றி அந்தப் பெண்ணை மீட்டனர்.

பிறகு அப்பெண்ணிடம் விசாரித்தபோது அப்பெண்ணின் பெயர் ராஜு என்பதும் அதே பகுதியில் தொட்டகம்பை எனும் பகுதியில் வசித்து வருவதும் மழையால் தனது வீடு சேதமடைந்ததும், இதற்கு குந்தா வட்டாட்சியரிடம் பலமுறை மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறினார்.

உடனடியாக அப்பெண்ணை மீட்டு அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு சென்றனர். தற்போது தமிழக முதல்வர் களத்தில் நடக்கும் ஒவ்வொரு பிரச்சனைக்கும் உடனடியாக தீர்வு காணும் வகையில் நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில், வனத்துறை அமைச்சர் முன்பு பெண் ஒருவர் தீக்குளிக்க முயற்சி செய்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதும், அவரை வனத்துறை அமைச்சர் மருத்துவமனை சென்று பார்க்கவில்லை எனவும் அப்பகுதி மக்களிடையே முணுமுணுப்பு ஏற்பட்டது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com