திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையத்தையொட்டி, 200 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தமிழ்நாடு அறிவுசார் நகரத்தை அமைப்பதற்கான ஆரம்ப கட்ட பணிகளை தமிழக அரசு தொடங்கியுள்ளது.
கல்வியை மையமாகக் கொண்டிருக்கும் உலகத் தரத்திலான ஒரு அறிவு சூழல் அமைப்பாக 'தமிழ்நாடு அறிவுசார் நகரை' உருவாக்க தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது.
அதன்படி, திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையத்தையொட்டி, சுமார் 200 கோடி மதிப்பீட்டில், ஆயிரத்து 703 ஏக்கர் பரப்பளவில் உருவாக்கப்படும் இந்த நகரத்திற்கு தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் மேம்பாட்டு கழகம், இந்நகருக்கான விரிவான தொழில்நுட்பம் மற்றும் பொருளாதார சாத்தியக் கூறுகளை ஆய்வு செய்வதற்கான ஆலோசகரை நியமிப்பதற்கான டெண்டர் கோரப்பட்டுள்ளது. இந்த டெண்டர் 19ம் தேதி இறுதி செயப்படும் என்றும் டிக்கோ தெரிவித்துள்ளது.