குளத்தில் விழுந்த குழந்தைகளை காப்பாற்றிய இளம் பெண்.. குவியும் பாராட்டு

குளத்தில் விழுந்த குழந்தைகளை காப்பாற்றிய இளம் பெண்.. குவியும் பாராட்டு

நாகை மாவட்டம் கீழ்வேளூரில் குளத்தில் விழுந்த குழந்தைகளை காப்பாற்றிய இளம் பெண்ணிற்கு பாராட்டு குவிந்து வருகிறது. கீழ்வேளூரில் உள்ள அஞ்சுவட்டத்தம்மன் கோவிலில் அமைந்துள்ள தீர்த்தக்குளம் சரியாக பராமரிக்கப்படாமல் புதர் மண்டி உள்ளது.

இந்த குளத்தின் கரையில் அப்பகுதியை சேர்ந்த அரவிந்த் என்பவரின் 2 குழந்தைகள் விளையாடி கொண்டிருந்தனர். அப்போது பாசி படிந்த சிமெண்ட் சுவற்றில் வழுக்கி, இளைய குழந்தை குளத்தில் விழுந்தது. அக்குழந்தையை காப்பாற்ற முயன்ற மற்றொரு குழந்தையும் தண்ணீரில் விழுந்தது.

அப்போது கோவிலுக்கு வந்த எழிலரசி என்பவர் குழந்தைகள் இருவரும் தண்ணீரில் மூழ்குவதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். தொடர்ந்து குளத்தில் இறங்கி குழந்தைகள் தண்ணீரில் மூழ்காதவாறு பிடித்துக்கொண்டார்.

இதையடுத்து அங்கு வந்த குழந்தைகளின் தந்தை தண்ணீரில் குதித்து மூவரையும் மேலே கொண்டு வந்தார். இதைத்தொடர்ந்து குழந்தைகளை காப்பாற்றிய பெண்ணை அப்பகுதி மக்கள் பாராட்டி வருகின்றனர்.