கரும்பூஞ்சை: குழந்தைகளுக்கு வந்தால் என்ன செய்வது?

கரும்பூஞ்சை தொற்றால் பாதிக்கப்படும் குழந்தைகளுக்கான சிகிச்சை வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

கரும்பூஞ்சை: குழந்தைகளுக்கு வந்தால் என்ன செய்வது?

கரும்பூஞ்சை தொற்றால் பாதிக்கப்படும் குழந்தைகளுக்கான சிகிச்சை வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

கொரோனாவில் இருந்து மீண்டவர்கள்  கருப்பு பூஞ்சை தொற்றால்  அதிகம் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கரும்பூஞ்சை தொற்று பாதிப்புக்கு ஏராளமான உயிரிழப்புகளும் நிகழ்கின்றன. தற்போது இந்தியவில் கொரோனா 3 ஆம் அலை குழந்தைகளையே பெரிதும் பாதிக்கும் என்ற எச்சரிக்கையை தொடர்ந்து அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இந்த நிலையில் கரும்பூஞ்சை தொற்றால் பாதிக்கப்படும் குழந்தைகளுக்கான சிகிச்சை நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, சிகிச்சையின்போது குழந்தைகளின் சிறுநீரக செயல்பாடு மற்றும் எலக்ட்ரோலைட்டுகளை உன்னிப்பாகக் கண்காணிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் கரும்பூஞ்சை தொற்று பாதிப்புக்கு சிகிச்சை மருந்தான ஆம்போடெரிசின் பி மருந்தை தண்ணீரில் நீர்க்க செய்து பின் குழந்தைகளுக்கு செலுத்த வேண்டும் உள்ளிட்ட வழிமுறைகளும் வகுக்கப்பட்டுள்ளது.