காவிரி டெல்டாவை அழிக்க சூழ்ச்சி நடக்கிறது...! அன்புமணி...

காவிரி டெல்டாவை அழிக்க சூழ்ச்சி நடக்கிறது...! அன்புமணி...

காவிரி டெல்டாவை அழிக்க சூழ்ச்சி நடப்பதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கருத்து தெரிவித்துள்ளார்.
  
இன்று சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்த பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் காவிரி டெல்டாவை அழிக்க சூழ்ச்சி நடப்பதாக தெரிவித்துள்ளார். "கடலூர் மாவட்டத்தில் உள்ள என்எல்சி நிறுவனம் தொடங்கவுள்ள 6 சுரங்கங்ளுக்கு அனுமதி கிடையாது என சட்டப்பேரவையில் அறிவிக்க வேண்டும்" எனவும்  "புதிய சுரங்கம் அமைக்க அனுமதி கொடுக்க மாட்டோம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிக்க வேண்டும்" எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும், "மாநில அரசுக்கு தெரியாமல் மத்திய அரசு எப்படி சுரங்கம் அமைக்க அனுமதி வழங்கும்?  மத்திய அரசின் அனைத்து திட்டங்களையும் எதிர்க்கும் திமுக என்.எல். சி விவகாரத்தில் மத்திய அரசுடன் கைகோர்ப்பது ஏன்?" எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

முன்னதாக என்.எல்.சி இந்தியா நிறுவனம் இரண்டாவது யூனிட் விரிவாக்க பணிகளுக்காக கடலூர் மாவட்டத்தில் 25,000 ஏக்கர் விவசாய நிலத்தினை தற்போது கையகப்படுத்தியுள்ளது. இதற்கு எதிர்ப்பு பாமக தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.