இதுக்கு முடிவே இல்லையா...’மீண்டும் சட்டப்போராட்டம் நடத்துவோம்...’ ஓபிஎஸ் வழக்கறிஞர்!!

இதுக்கு முடிவே இல்லையா...’மீண்டும் சட்டப்போராட்டம் நடத்துவோம்...’ ஓபிஎஸ் வழக்கறிஞர்!!

பொதுக்குழு வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்துள்ள  தீர்ப்பு எடப்பாடி பழனிச்சாமி தரப்பினருக்கு முழு வெற்றியல்ல தற்காலிக வெற்றி தான்.

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள இல்லத்தில் பேட்டியளித்த ஓபிஎஸ் தரப்பு வழக்கறிஞர் திருமாறன், இந்த வழக்கில் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை சிவில் கோர்ட்டில் விசாரணை நடத்திக் கொள்ளுமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பதாகவும், சிவில் நீதிமன்றத்தில்  மூன்று வழக்கானது தொடர்ந்து நடைபெறும் என்பதால் இதனை எடப்பாடி தரப்பினருக்கு முழு வெற்றி என கருத முடியாது எனவும்  தெரிவித்துள்ளார்.

மீண்டும் சட்டப்போராட்டம் தொடர வழிவகை செய்திருக்கிறது எனவும் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவி தொடர்ந்து நீடிப்பதாகவும் திருமாறன் கூறியுள்ளார்.

வழக்கு முடியும்வரை பொதுச்செயலாளர் தேர்தல் நடத்த இயலாது எனவும், தேர்தல் நடத்தினால் நீதிமன்றத்தை நாடுவோம் எனக் கூறிய அவர் உரிமையியல் நீதிமன்ற வழக்கில் குறிப்பிட்ட கால அவகாசத்தில் முடிவுக்கு கொண்டு வருவோம் எனவும் வழக்கறிஞர் திருமாறன் தெரிவித்துள்ளார்.

மேலும் பொதுக்குழு வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்துள்ள  தீர்ப்பு எடப்பாடி பழனிச்சாமி தரப்பினருக்கு முழு வெற்றியல்ல தற்காலிக வெற்றி தான் எனப் பேசியுள்ளார்.

இதையும் படிக்க:  சென்னையில் தஞ்சம் புகுந்த பெண்.... பாதுகாப்பு அளிப்பதாக உறுதி?!!