தனிநீதிபதியின் தீர்ப்பு எங்களுக்கு பின்னடைவு இல்லை...ஓபிஎஸ் தரப்பு ஆதரவாளர் பேட்டி!

தனிநீதிபதியின் தீர்ப்பு எங்களுக்கு பின்னடைவு இல்லை...ஓபிஎஸ் தரப்பு ஆதரவாளர் பேட்டி!

சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பு தங்கள் தரப்புக்கு பின்னடைவு இல்லை என்று வைத்திலிங்கம் தெரிவித்துள்ளார். 

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்க கோரியும், அதிமுக பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிராகவும் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கில் தனிநீதிபதி குமரேஷ் பாபு இன்று தீர்ப்பு வழங்கினார். அதில் அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் செல்லும் என்று தெரிவித்த நீதிபதி, ஓபிஎஸ் தரப்பில் அளிக்கப்பட்ட எதிர் மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். மேலும், பொதுச்செயலாளர் தேர்தல் முடிவுகளை அறிவிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டது.

இதையும் படிக்க : அதிமுக பொதுக்குழு வழக்கு: ஈபிஎஸ்க்கு ஆதரவாக அமைந்த தீர்ப்பு...ஓபிஎஸ்ஸின் அடுத்தக்கட்ட மூவ் என்ன?

அதன்படி, நீதிமன்ற தீர்ப்பிற்கு பிறகு அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கில் ஈபிஎஸ்க்கு ஆதரவாக தீர்ப்பு வந்துள்ளதால், இது ஓபிஎஸ்க்கு பின்னடைவு என்று அதிமுக தரப்பினர் கூறிவருகின்றனர்.

இந்நிலையில் சென்னை பசுமை வழிச் சாலையில் உள்ள ஓ பன்னீர் செல்வம் இல்லத்தில் வைத்தியலிங்கம் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதியின் தீர்ப்பு எங்களுக்கு பின்னடைவு இல்லை என்று கூறிய வைத்தியலிங்கம், தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து மேல் முறையீடு செய்வதாக கூறினார்.