எதிர்க்கட்சிகளின் விமர்சனங்கள் தேவையில்லை...முதலமைச்சரின் நெத்தியடி பதில்!

எதிர்க்கட்சிகளின் விமர்சனங்கள் தேவையில்லை...முதலமைச்சரின் நெத்தியடி பதில்!

பருவமழை பணிகள் குறித்து எதிர்க்கட்சிகளின் விமர்சனங்கள் தனக்கு தேவையில்லை எனவும், திமுக அரசு சிறப்பாக செயல்பட்டு வருவதாகவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். 

வடகிழக்கு பருவமழை:

வடகிழக்கு பருவமழை கடந்த சில தினங்களாகவே தமிழகம் முழுவதும் கொட்டி தீர்த்து வருகிறது. தொடர்ந்து கனமழை பொழிந்து வருவதால் சென்னை உள்ளிட்ட நிறைய மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளது. 

ஆய்வு மேற்கொண்ட முதலமைச்சர்:

அப்படி மழையால் பாதிக்கப்பட்ட இடங்களில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்து வருகிறார். அந்தவகையில், மழையால் பாதிக்கப்பட்ட கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் இன்று முதலமைச்சர் ஆய்வு பணியில் ஈடுபட்டார்.

இதையும் படிக்க: 12 வருடத்திற்கு முன்பே நாங்கள் செய்துவிட்டோம்...அமித்ஷாவுக்கு தக்க பதிலடி கொடுத்த பொன்முடி!

நிவாரணப் பொருட்களை வழங்கிய ஸ்டாலின்:

அதன்படி, இன்று காலை கடலூர் மாவட்டத்தில் கீழ்பவாணிகுப்பம், வல்லபடுகை உட்பட பல இடங்களில் ஆய்வு மேற்கொண்ட மு.க.ஸ்டாலின், அதிகாரிகளிடம் மழை பாதிப்பு குறித்து கேட்டறிந்தார். அத்துடன், அப்பகுதி மக்களுக்கு மழைக்கான நிவாரணப் பொருட்களையும் வழங்கினார். 

எதிர்க்கட்சிகளின் விமர்சனங்கள் தேவையில்லை:

அதனை தொடர்ந்து மயிலாடுதுறை மாவட்டம் உமையாள்பதி பகுதிக்கு சென்ற முதலமைச்சர், மழையால் பாதிக்கப்பட்ட இடங்களை ஆய்வு செய்தார். அதன்பின் சீர்காழியில் ஆய்வு மேற்கொண்ட முதலமைச்சர் அங்கு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், எதிர்க்கட்சிகளின் விமர்சனங்கள் குறித்து எனக்கு கவலையில்லை; மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் திமுக அரசு சிறப்பாக செயல்பட்டு வருவதாகவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். 

முன்னதாக, வடகிழக்கு பருவமழை பொழிந்து வரும் இவ்வேளையில், ஆளுகின்ற மாநில அரசு அதற்கான எந்தவொரு நடவடிக்கைகளையும் சரியாக செய்யவில்லை என்று எதிர்க்கட்சிகள் தரப்பில் தொடர்ந்து விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டது. இந்நிலையில் இன்று சீர்காழியில் ஆய்வு மேற்கொண்ட முதலமைச்சர் எங்களுக்கு எதிர்க்கட்சிகளின் விமர்சனங்கள் குறித்து கவலையில்லை என்று தக்க பதிலடி கொடுத்துள்ளார்.